பொது செய்தி

தமிழ்நாடு

நாளை என்ற அலட்சியம் வேண்டாம்

Added : டிச 01, 2019
Advertisement

கள்ளக்குறிச்சி : நாளை படித்து கொள்ளலாம் என்ற அலட்சியத்தை தவிர்க்க வேண்டும் என்று மாணவர்களுக்கு ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் செந்தில்ராஜ் பேசினார்.

கள்ளக்குறிச்சியில் 'தினமலர்' நாளிதழ், நடத்திய 'சக்சஸ் மந்த்ரா' நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:மாணவர்கள் முதலில் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போது தான் அனைத்து கேள்விகளையும், அனைத்து தேர்வுகளையும் எதிர்கொள்ள முடியும். புத்தகத்தில் பாடங்கள் பெரிய அளவில் இருப்பதால் படிக்கும் பழக்கத்தை இழக்கிறீர்கள்.சினிமா படங்களையும், கதை புத்தகங்களையும் முழுமையாக படித்து அதன் மைய கருத்தை புரிந்து கொண்டு மற்றவர்களிடம் தெரிவிப்பது போல், பாட புத்தகங்களையும் முழுமையாக படித்து அதிலுள்ள கருத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த நோக்கத்தில் தான் பாட புத்தகங்கள் தயார் செய்யப்படுகிறது.பாடத்தினை முழுமையாக படித்து குறிப்பெடுக்கும் பழக்கத்தை சிறு வயதில் இருந்தே ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த முறையை பின்பற்றினால் தான் கல்லுாரி படிப்பு எளிதாக இருக்கும். கல்லுாரிகளில் புத்தகங்கள் இல்லை, பல்வேறு புத்தகங்களில் இருந்து குறிப்பு எடுத்து தான் படிக்க வேண்டும். பொதுத் தேர்விற்கு சில நாட்களே உள்ளன. தேர்வுக்கு தயாராக ஒவ்வொரு பாடத்திலும் எளிமையாக இருக்கும் பாடங்களை முதலில் தேர்வு செய்து, அதை தெளிவாக படிக்க வேண்டும். பிறகு அதை பல முறை எழுதி பார்க்க வேண்டும்.

அதன் பிறகு கடினமான பாடங்களை படிக்க வேண்டும். நீங்கள் படிப்பதை குறிப்பு எடுத்துக்கொண்டு பெற்றோரிடமும், நண்பர்களுடனும் கலந்துரையாட வேண்டும். நண்பர்களிடம் பாடத்தை பற்றி பேசும் போது மறக்காமல் ஞாபகம் வைத்துக் கொள்ள உதவும். தற்போது படிப்பது, பிற்காலத்தில் பல்வேறு தேர்வுகளை எதிர்கொள்ள உதவியாக இருக்கும். மற்றவர்களிடம் பேசுவதை குறைத்து கொண்டு படித்ததை நினைவு கூர்ந்து பாருங்கள். நாளை படிக்கலாம் என்ற முறையை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X