பொது செய்தி

தமிழ்நாடு

கைதிக்கு முடி திருத்தி பெண் எஸ்.ஐ., அறிவுரை

Added : டிச 01, 2019
Advertisement

ஆவடி : ஆவடி, வெள்ளனுாரைச் சேர்ந்தவர் ஏழுமலை, 37; காய்கறி குடோன் உரிமையாளர். இவர், நேற்று முன்தினம் இரவு, கன்னபாளையத்தில் உள்ள குடோனுக்கு சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூவர், மொபைல்போனை பறித்து தப்ப முயன்றனர்.

அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஒருவரை மட்டும் பிடித்தனர்; மற்றவர்கள் தப்பினர். ஆவடி போலீசார், அந்த நபரை மீட்டு விசாரித்ததில், பட்டாபிராமைச் சேர்ந்த பாலு, 19, என தெரியவந்தது. அவருடன் வந்த இருவர், சிறுவர்கள் என்பதும் தெரிந்தது. சிறுவர்களை பிடித்து, மொபைல் போனை மீட்ட போலீசார், பாலுவை சிறையிலும், சிறுவர்களை சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.

வழக்கின் விசாரணை அதிகாரியான உதவி ஆய்வாளர் கோகிலா, பரட்டை தலையுடன் இருந்த பாலுவிற்கு, முடி திருத்தம் செய்து, அறிவுரை வழங்கி உள்ளார். சக போலீசார், அவரை பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X