சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இலவச அரிசி வழங்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம்

Added : டிச 01, 2019
Advertisement

புதுச்சேரி : இலவச அரிசிக்கான பணம் 10 நாளில் வழங்காவிட்டால் அ.தி.மு.க., சார்பில் மக்களை திரட்டி சட்டசபையை முற்றுகையிடுவேன் என அன்பழகன் எம்.எல்.ஏ., கூறினார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:புதுச்சேரியில் தி.மு.க., துணையோடு ஆட்சி நடத்தும் காங்., அரசு அறிவித்த இலவச அரிசி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. இலவச அரிசி வழங்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிய சூழ்நிலையிலும், இலவச அரிசியையோ அல்லது அதற்கான பணத்தையோ இன்னும் அரசு மக்களுக்கு வழங்கவில்லை. இலவச அரிசிக்கு இந்த நிதியாண்டிற்கு மொத்தம் ரூ.271 கோடி ஒதுக்க வேண்டும்.

ஆனால், ரூ.160 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரை 8 மாத காலத்திற்கு சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு ரூ.4,800ம், மஞ்சள் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.2,400 பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்தி இருக்க வேண்டும். ஆனால், பணம் போடாமல் ஏழை மக்களை அரசு வஞ்சித்து வருகிறது. 8 மாதத்திற்கான பணத்தை 10 நாட்களுக்குள் அரசு செலுத்தாவிட்டால், அ.தி.மு.க., தலைமையின் அனுமதி பெற்று, அடுத்த வாரம் மக்களை திரட்டி சட்டசபையை முற்றுகையிடப்படும்.

அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு ரூ.ஆயிரம் பரிசு கூப்பன் வழங்குவதாக உறுதியளித்த அரசு தற்போது ரூ.500 மட்டுமே வழங்குவதாக அறிவித்து ஏமாற்றியுள்ளது.நெட்டப்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் விபல்குமார் தற்கொலை வழக்கில் பல்வேறு எதிர்மறையான கருத்துகள் பரவி வருவதால், உண்மை நிலையை அறிய பணியில் உள்ள நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X