இந்தியா

புதுச்சேரியில் கொட்டியது கனமழை

Added : டிச 01, 2019
Advertisement

புதுச்சேரி : புதுச்சேரியில் நேற்று பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 16ம் தேதி வட கிழக்கு பருவமழை துவங்கிய போதிலும், போதிய அளவு மழை பெய்யவில்லை. இந்நிலையில் வளிமண்டலத்தில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த ஒரு வாரமாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழையில் நேற்று காலை வரை புதுச்சேரியில் 593 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விடிய, விடிய மழை பெய்தது.

அதில் நேற்று முன்தினம் காலை 8:30 மணி முதல் நேற்று காலை 8:30 மணிவரையில் 30 மி.மீ., மழை பதிவான நிலையில் நேற்று காலை மழை தீவிரமடைந்து மாலை 5:30 மணிக்குள் 43 மி.மீ., மழை கொட்டி தீர்த்தது.தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. வில்லியனுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வடிகால் வாய்க்கால்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக மழை நீர் சாலைகளில் குளம் ேபால் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து கன மழை பெய்து வந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இருப்பினும், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருவதால் பாகூர், திருக்கனுார், நெட்டப்பாக்கம் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அவசர உதவிக்குவடகிழக்கு பருவமழை காரணமாக மரம் விழுதல், மின்சாரம் பாதிப்பு, கால்வாய் அடைப்பு உள்ளிட்ட பாதிப்புகளை வருவாய் துறையின் அவசர கால பேரிடம் மையம் கண்காணித்து, அந்தந்த துறைகள் மூலமாக பணிகளை துரிதப்படுத்தி வருகிறது.மழை பாதிப்புகள் இருந்தால் 1077 அல்லது 1070 என்ற அவசர கால மைய எண்ணை தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X