'பாதுகாப்பாக' இருப்போம்! --- இன்று உலக எய்ட்ஸ் தினம் -

Added : டிச 01, 2019 | கருத்துகள் (1)
Advertisement
'பாதுகாப்பாக' இருப்போம்!  --- இன்று உலக எய்ட்ஸ் தினம் -

உலகின் கொடிய நோய்களில் ஒன்று எய்ட்ஸ்.இது ஹியூமன் இம்யுனோ டெபிஷியன்சி வைரஸ் (எச்.ஐ.வி., ) எனும் வைரசால் ஏற்படுகிறது. இது மனித உடலில் உள்ள ரத்த வெள்ளை அணுக்களை அழித்து, நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கிறது.

நோய்க்கு எதிராக உடல் போராட முடியாத நிலையை ஏற்படுத்துகிறது. கடைசியில் மரணம்
ஏற்படுகிறது. இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் டிச.,1, உலக எய்ட்ஸ்
தினமாக கடைபிடிக்கப்படுகிறது.


எப்படி பரவுகிறது



'ஒருவனுக்கு ஒருத்தி' என்ற ஒழுக்க கலாசாரத்தை பின்பற்றாதது, பாதுகாப்பற்ற மற்றும் பொருந்தாத 'உறவு' காரணமாகவே எச்.ஐ.வி., வைரஸ் அதிகமாக பரவுகிறது. எய்ட்ஸ்
பாதிக்கப்பட்ட தாய் மூலம் பிறக்கும் குழந்தை, பரிசோதிக்கப்படாத ரத்தம், சுத்திகரிக்கப்படாத ஊசி மூலமும் பரவுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் பொருட்களை பயன்படுத்துவதாலோ;
தொடுவதாலோ; உணவை பரிமாறிக் கொள்வதாலோ பரவாது.

எய்ட்சின் வீரியத்தை குறைக்கும் மருந்தை கண்டுபிடித்துள்ளனர். எய்ட்சை குணப்படுத்த
முடியா விட்டாலும், நீண்ட நாட்கள் வாழ்வதற்கு சிகிச்சை முறைகள் உள்ளன. மற்ற
பரிசோதனைகள் போல எய்ட்ஸ் வைரஸ் குறித்த பரிசோதனையும்சீரான இடைவெளியில் செய்து கொள்ள வேண்டும். இதன்மூலம் நோய் வருமுன் பாதுகாக்கலாம்.



3.20

எய்ட்ஸ் வைரஸ் குறித்து 1984ல் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை 3.20 கோடி பேர்
உயிரிழந்துள்ளனர். 2018ல் 7.7 லட்சம் பேர் பலியாகினர்.

62

எய்ட்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏ.ஆர்.டி., எனப்படும் 'ஆன்டிரெட்ரோவைரல் தெரபி' சிகிச்சை அளிக்கப்படுகிறது. 2018ல் இளைஞர்களில் 62% பேர், குழந்தைகளில் 54% பேர்,
கருவுற்ற தாய்மார்கள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்களில் 82% பேர் இச்சிகிச்சை எடுத்தனர்.

3.79

உலகில் 2018 கணக்கின் படி, 3.79 கோடி பேர் எய்ட்ஸ் நோயுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 2.57 கோடி பேர் ஆப்ரிக்காவை
சேர்ந்தவர்கள். உலகில் 2018ல் 17 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.

72

2018ன் படி, எய்ட்சால் பாதிக்கப்பட்டவர்களில் 72 சதவீதம் பேர் தங்களது நிலையை தெரிந்து கொண்டுள்ளனர். 62 சதவீதம் பேர் ஏ.ஆர்.டி., சிகிச்சை மேற்கொள்கின்றனர்.

21

மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் 2017 கணக்கின் படி, இந்தியாவில் 21 லட்சம் பேர் எய்ட்சால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கூடுவாஞ்சேரி கோகிலா இதை முதலில் சுடலைக்கு சொல்லுங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X