தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்வது குறித்து, இந்நிகழ்ச்சி வாயிலாக, அறிந்து கொள்ள முடிந்தது. மாணவர்களின் எதிர்கால நலனில், 'தினமலர்' பெரும் பங்காற்றி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. எஸ்.அனாஸ், திருவல்லிக்கேணி'நீட்' உள்ளிட்ட தேர்வுகளில், எத்தகைய நடைமுறை பின்பற்றப்படுகிறது;
எந்த தவறை செய்யக் கூடாது; அதிக மதிப்பெண் பெற, செய்ய வேண்டியது, பாடத்திட்டம், போட்டித்தேர்வு ஆகியவை குறித்து அறிய முடிந்தது. எம்.பார்த்திபன், மேடவாக்கம் தேவையில்லாத பதற்றத்தால், தேர்வு அறையில் நேரம் விரயமாகிறது. பதற்றத்தை எப்படி போக்குவது, எந்த இடத்தில் தவறுகள் செய்யக் கூடாது என்பதை, நன்கு அறிந்து கொள்ள முடிந்தது. எம்.அனந்த கிருஷ்ணன் கீழ்ப்பாக்கம்மாநில அளவிலான தேர்வுக்கு, வினாத்தாள் எவ்வகையில் தயாரிக்கப்படுகிறது, மதிப்பீடு எப்படி செய்யப்படுகிறது என்பது குறித்து அறிந்து கொள்ள முடிந்தது. ஜி.மிதுனேஷ், கீழ்ப்பாக்கம்