இந்தியா

புதுச்சேரி செண்பகா கன்வென்ஷன் சென்டரில் 'அல்கெமி' வாழ்வியல் பயிற்சி துவக்க விழா

Added : டிச 01, 2019
Advertisement

புதுச்சேரி : புதுச்சேரி செண்பகா கன்வென்ஷன் சென்டரில் இரண்டு நாள் 'அல்கெமி' என்ற வாழ்வியல் பயிற்சி வகுப்பின் துவக்க விழா நேற்று நடந்தது.

கோவையை தலையிடமாகக் கொண்டு செயல்படும் தக்ஷிணா அறக்கட்டளை, லாபநோக்கமற்ற தொண்டு நிறுவனமாக குரு மித்ரேஷிவா தலைமையில் நடைபெற்று வருகிறது.'அல்கெமி' என்பது மனிதன் தன் பிறப்பு முதல் இறப்புவரை எப்படி வாழ வேண்டும் என்ற மெய் ஞானத்தை கற்றுத்தரும் வகுப்பு ஆகும். அந்தக்காலத்தில் சித்தர்களால் வடிவமைக்கப்பெற்று குருகுலத்தில் போதிக்கப்பட்டு வந்த மெய்ஞானத்தை இக்காலத்திற்கு ஏற்ப மாற்றி கற்றுத்தருவதே 'அல்கெமி' பயிற்சி வகுப்பாகும்.

முப்பது ஆண்டுகளுக்கு மேல் பல குருமார்களிடம் வாழ்க்கை உண்மையை குரு மித்ரேஷிவா 'அல்கெமி' என்ற வாழ்வியல் நிகழ்ச்சி மூலமாக அவர் கண்டறிந்த உண்மையை கடந்த 7 ஆண்டுகளாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு உணர்த்தி அவர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளார்'அல்கெமி' நிகழ்ச்சி இந்தியாவின் பல நகரங்களிலும் தமிழகத்தில் கோவை, சென்னை, சேலம் போன்ற நகரங்களிலும் அமெரிக்கா, சிங்கப்பூர், பாரீஸ், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் நடைபெற்று வருகிறது.

புதுச்சேரியில் முதல் முறையாக இரண்டு நாள் 'அல்கெமி' வாழ்வியல் பயிற்சி வகுப்பு புதுச்சேரி, செண்பகா கன்வென்ஷன் சென்டரில் கோவை தக்ஷிணா அறக்கட்டளை தொண்டு நிறுவன குரு மித்ரேஷிவா தலைமையில் நேற்று துவங்கியது. நிகழ்ச்சியில் அமைச்சர் ஷாஜகான், எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமி நாராயணன், ஜான்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.வரும் 7 மற்றும் 8ம் தேதிகளில் நடைபெறும் இரண்டு நாள் பயிற்சி வகுப்பில், மனம், உடல் மற்றும் பொருளாதாரம் இவற்றில் எப்படி ஒவ்வொரு மனிதனும் நிறைவாக ஆனந்தமாக வாழ்வது என்பது கற்றுத்தரப்படுகிறது.

இந்த வகுப்பின் மூலம் மனதில் தெளிவாகவும், உடலில் நோயின்றியும், பொருளாதாரத்தில் செழிப்பாகவும் ஆனந்தமாக வாழமுடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X