சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் கழுத்தறுத்த தோழி கோயம்பேடில் சிக்கினார்

Added : டிச 01, 2019
Share
Advertisement
கோயம்பேடு : கள்ளக்காதல் விவகாரத்தில், பெண்ணின் கழுத்தை அறுத்த, மற்றொரு பெண்ணை, போலீசார் கைது செய்தனர். கொடுங்கையூர், வேம்புலி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர், கார்த்திக், 30. இவரது மனைவி முனியம்மாள், 26. நேற்று முன்தினம் இரவு, கோயம்பேடு பேருந்து நிலைய நடைமேடையில் நின்று, மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார். முனியம்மாளின் தோழி பிரியா, 22 என்பவர் அங்கு வந்தார். திடீரென

கோயம்பேடு : கள்ளக்காதல் விவகாரத்தில், பெண்ணின் கழுத்தை அறுத்த, மற்றொரு பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.

கொடுங்கையூர், வேம்புலி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர், கார்த்திக், 30. இவரது மனைவி முனியம்மாள், 26. நேற்று முன்தினம் இரவு, கோயம்பேடு பேருந்து நிலைய நடைமேடையில் நின்று, மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார். முனியம்மாளின் தோழி பிரியா, 22 என்பவர் அங்கு வந்தார். திடீரென இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரியா, மறைத்து வைத்திருந்த கத்தியால், முனியம்மாளின் கழுத்தை அறுத்தார்.

ரத்த வெள்ளத்தில் மிதந்த முனியம்மாளை, அங்கிருந்தவர்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.கோயம்பேடு போலீசார், நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த பிரியாவை கைது செய்தனர். விசாரணையில், கார்த்திக்குடன், பிரியாவிற்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதில் ஏற்பட்ட தகராறில், முனியம்மாளின் கழுத்தை, பிரியா அறுத்தது தெரியவந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X