பொது செய்தி

தமிழ்நாடு

மனநல காப்பகத்தில் உயிழந்தோர் விபரம் கேட்கிறது ஆணையம்

Added : டிச 01, 2019
Advertisement

சென்னை : கீழ்ப்பாக்கம், அரசு மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில், மூன்றாண்டுகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்த விபரங்களை அளிக்கும்படி, மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, கீழ்ப்பாக்கம், அரசு மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் சிலர், சமீபத்தில் உயிரிழந்தனர். மேலும், பலர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.இதுகுறித்து, மாநில மனித உரிமை ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது. ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன், மருத்துவ கல்வி இயக்குனர், மன நல காப்பக இயக்குனர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள, நோட்டீசில் கூறியிருப்பதாவது:கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில், மூன்றாண்டுகளில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்.

அதற்கான காரணங்கள் என்ன; மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளனவா; மருத்துவ வசதியை ஏற்படுத்த அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை குறித்து, நான்கு வாரத்திற்குள் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X