கஞ்சா வியாபாரிகள் கைதுசெங்குன்றம்: செங்குன்றம், கட்டபொம்மன்தெருவைச் சேர்ந்த ஜெரோம் குழந்தை, 20, பவானி நகரைச் சேர்ந்த மோகன், 24, நாரவாரிக்குப்பத்தைச் சேர்ந்த ஜோதிலிங்கம், 56, ஆகியோர், செங்குன்றம் பஸ் நிலையம் அருகே, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, கஞ்சா விற்றனர்.அவர்களை கண்காணித்த, செங்குன்றம் தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் இரவு மடக்கி பிடித்தனர்.
மூவரிடம் இருந்து, 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மூவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.மாலில் கஞ்சா விற்பனைஆயிரம்விளக்கு: ஸ்பென்சர் பிளாசா மால் வாகன நிறுத்தத்தில், நேற்று முன்தினம் இரவு, மூன்று வாலிபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆயிரம்விளக்கு போலீசார், கஞ்சா விற்ற வாலிபர்களை, கையும் களவுமாக பிடிக்க, சாதாரண உடையில் அங்கு சென்றனர்.அங்கு, ஐ.டி., ஊழியர்களை குறி வைத்து, கஞ்சா விற்ற மூவரை, போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
மேற்கு சைதாப்பேட்டையைச் சேர்ந்த ராகவேந்திரன், 23, மணிப்பூரைச் சேர்ந்த அன்வர் ஹூசேன், 26, அண்ணா சாலையைச் சேர்ந்த அப்துல் ரகுமான், 32, என தெரியவந்தது. வார விடுமுறை நாட்களில், மாலில் பணிபுரியும், ஐ.டி., பி.பி.ஓ., ஊழியர்களை குறி வைத்து, கஞ்சா விற்று வந்ததும் தெரியவந்தது. மூவரையும் நேற்று கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.பைக் திருடிய இருவர் சிக்கினர்எண்ணுார்:
எர்ணாவூரைச் சேர்ந்தவர் லட்சுமணன், 39; தனியார் நிறுவன ஊழியர். கடந்த, 26ம் தேதி, இவரது வீட்டருகே நிறுத்தி வைக்கப்பட்ட, இருசக்கர வாகனம் திருடு போனது.எண்ணுார் போலீசார், கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்த போது, மணலி, சின்ன சேக்காடு பகுதியைச் சேர்ந்த இந்திரஜித், 35, உத்திரமேரூரைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன், 32, ஆகியோர் திருடியது தெரியவந்தது. இருவரையும், போலீசார் நேற்று கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.
மொபைல், நகை, 'அபேஸ்'போரூர்: பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர், ராகுல் குமார், 28. இவர், முகலிவாக்கத்தில் தங்கி, டீக்கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, மவுன்ட் -- பூந்தமல்லி சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்ற போது, ஆட்டோவில் வந்த மர்ம கும்பல், ராகுல்குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி, ஒரு சவரன் நகை, மொபைல் போன், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். போரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
இரு வீடுகளில் வாகனம் திருட்டுதுரைப்பாக்கம்: துரைப்பாக்கம், குமரன்குடில் நகரைச் சேர்ந்தவர் ரஞ்சித், 23; ஐ.டி., ஊழியர். நேற்று முன்தினம் இரவு, வீட்டு முன் நிறுத்திய இவரது, 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனம் திருடு போனது. அதே பகுதியைச் சேர்ந்த செல்வம், 32, இரு தினங்களுக்கு முன், இவரது இருசக்கர வாகனமும் திருடு போனது. திருடர்களின் உருவம், தெருவில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது. துரைப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மொபைல் பறித்த மூவருக்கு, 'கம்பி'திருவேற்காடு: திருவேற்காடு, மாதிராவேடு பகுதியைச் சேர்ந்தவர், சரவணன், 40; பேக்கரி ஊழியர். நேற்று முன்தினம் இரவு, பேக்கரி வாசலில் நின்று போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில், அங்கு சென்ற, பெண் உட்பட மூவர், அவரிடம், முகவரி விசாரிப்பது போல் நடித்து, மொபைல் போனை பறித்து தப்பினர். விசாரணையில், பெண், அம்பத்துார், அத்திப்பட்டை சேர்ந்த ரெபேக்காள், 26, மற்றும் அவரது உறவினர்களான, 17 வயதில் இரு சிறுவர்கள் என தெரிந்தது. நேற்று காலை, மூவரையும் கைது செய்த போலீசார், சிறுவர்களை சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
சூதாட்டத்தில் ஈடுபட்டோருக்கு, 'காப்பு'அரும்பாக்கம்: அரும்பாக்கம் போலீசார், அமராவதி நகர், 3வது தெருவில், நேற்று முன்தினம் இரவு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கிடமாக தெரிந்த வீட்டில், திடீரென சோதனை செய்தனர். இதில், எட்டு பேர் கொண்ட கும்பல், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. குமார், 62, திவகார், 51 உட்பட, 8 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து, 47 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.பொறியாளரிடம் நகை பறிப்புகொரட்டூர்: கொரட்டூர், காமராஜ் நகர், 8வது தெருவைச் சேர்ந்தவர், தட்சிணாமூர்த்தி, 33; தனியார் கார் நிறுவன பொறியாளர். நேற்று முன்தினம் இரவுப்பணி முடிந்து, 1:10 மணி அளவில், நிறுவன பஸ்சில் கொரட்டூருக்கு சென்றார். சி.டி.எச்., சாலையில் இருந்து, காக்கை நகர் வழியாக வீட்டிற்கு நடந்து சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், கத்திமுனையில் அவரை மிரட்டி, 2 சவரன் செயினை பறித்துச் சென்றனர்.
கொரட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.நகைக் கடையில் கைவரிசைபுதுவண்ணாரப்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள நகைக்கடையில், மர்ம நபர் ஒருவர், நேற்று நகை வாங்குவது போல் வந்துள்ளார். கடையில் பெண்கள் கூட்டம் இருப்பதை பயன்படுத்தி, கையில் ஒரு ஜோடி கம்மலை மறைத்து வைத்து, சிறிது நேரத்தில் தப்பினார். கடை உரிமையாளர் நகைகளை சரிபார்த்த போது, 12 கிராம் கம்மல் காணாமல் போனது தெரியவந்தது. புதுவண்ணாரப்பேட்டை போலீசார், கடையில் இருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.
8 கிலோ கஞ்சா பறிமுதல்பள்ளிக்கரணை: நன்மங்கலம், அஸ்தினாபுரம் சாலையில் உள்ள ஒரு வீட்டை, கஞ்சா குடோனாக்கி, விற்பனையில் ஈடுபடுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பள்ளிக்கரணை போலீசார், சோதனையிட்டனர். அங்கு, 8 கிலோ கஞ்சா இருந்தது. பறிமுதல் செய்த போலீசார், அங்கிருந்த மூவரை பிடித்து விசாரித்ததில், ராஜசேகர், 28, யுவராஜ், 23, ஜெயகோபி, 63, என தெரிந்தது. ஜெயகோபி, ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வருவதும், மற்ற இருவரும், சில்லரை விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மூவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.