சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தற்கொலை, பலி

Added : டிச 01, 2019
Advertisement

விபத்தில் முதியவர் மரணம்அசோக் நகர்: மேற்கு மாம்பலம், ராகவன் காலனியைச் சேர்ந்தவர் செல்வம், 70. நேற்று முன்தினம் இரவு, மேற்கு மாம்பலம், கோவிந்தன் சாலையைக் கடக்க முயன்ற போது, அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம், அவர் மீது மோதியது.துாக்கி வீசப்பட்ட செல்வம், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, கே.கே.நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பலியானார். கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.

வேன் மோதி வக்கீல் உயிரிழப்புபிராட்வே: அயனாவரம், வி.பி., காலனியைச் சேர்ந்தவர் சங்கர், 55; ஐகோர்ட் வழக்கறிஞர். பிராட்வே, ராஜா அண்ணாமலை மன்றம் வழியாக, நேற்று ஐகோர்ட் வளாகத்திற்குள், பைக்கில் வேகமாக நுழைய முயன்றார்.அப்போது, குறளகத்தில் இருந்து சென்ற மினி வேன், சங்கர் பைக் மீது மோதியதில், அவர் துாக்கி வீசப்பட்டு, பலத்த காயமடைந்தார். ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

யானைக்கவுனி போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.மாடியில் இருந்து விழுந்தவர் பலிமாதவரம்: அரும்பாக்கம், அன்னை சத்யா நகர், எம்.எம்.டி.ஏ., காலனியில் வசித்தவர் பாலசந்திரன், 30; 'ஏசி' மெக்கானிக். நேற்று முன்தினம் மாலை முதல், மாதவரம், ரெட்டேரி மேம்பாலம் அருகே உள்ள, ஒன்பது மாடி வளாகத்தின், நான்காவது தளத்தில், 'ஏசி' இயந்திரங்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.அவருடன் மேலும் சிலர் இருந்தனர். நேற்று அதிகாலை, 3:10 மணி அளவில், பாலசந்திரன் தவறி கீழே விழுந்தார்.

பலத்த காயமடைந்த அவர், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். மாதவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.பெண் தற்கொலைதிரு.வி.க.நகர்: திரு.வி.க.நகர், காமராஜர் நகர், மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் அஸ்லாம் பாட்ஷா, 30; மொபைல் போன் சர்வீஸ் கடை ஊழியர். இவரது மனைவி ஹாஜிரா பானு, 25. இவர்களுக்கு, 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

கணவன்- - மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. சமீபத்தில் நடந்த தகராறில், ஹாஜிரா பானு துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். திரு.வி.க.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X