பொது செய்தி

தமிழ்நாடு

நுாலகம் திறப்பு

Added : டிச 01, 2019
Advertisement

சென்னை : 'தினமலர்' செய்தி எதிரொலியாக, பழவந்தாங்கலில் கட்டி முடித்து, இரண்டு மாதங்கள் ஆகியும், திறக்கப்படாமல் இருந்த நுாலக கட்டடம் திறக்கப்பட்டது.

ஆலந்துார் மண்டலம், 164வது வார்டு, பழவந்தாங்கல், குமரன் தெருவில், 1970ம் ஆண்டு கட்டப்பட்ட, முழுநேர நுாலகம் இருந்தது.அதன் மேற்கூரை பெயர்ந்து, கட்டடம் விரிசல் விழுந்து, ஆபத்தான நிலையில் காணப்பட்டது. 2014ம் ஆண்டு, நங்கநல்லுார், அரசு பள்ளி கட்டடத்தில் உள்ள முதல் மாடியில், நுாலகம் மாற்றப்பட்டது.பழைய நுாலக கட்டடத்தை இடித்து, புதிய கட்டடம் கட்ட, 75 லட்சம் ரூபாயை, நுாலகத்துறை ஒதுக்கியது. நான்கு ஆண்டுகளாக நடந்த கட்டுமானப் பணி, இரண்டு மாதங்களுக்கு முன் முடிந்தது. ஆனால், நுாலக கட்டடம் திறக்கப்படவில்லை.

இது குறித்து, நம் நாளிதழ், படத்துடன் கூடிய செய்தி வெளியிட்டது. அதன் நடவடிக்கையாக, நுாலக கட்டடம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.வரும் வாரத்தில், புதிய கட்டடத்தில் நுாலகம் செயல்படும் என, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X