பொது செய்தி

தமிழ்நாடு

பெண்கள் வலுப்பெற, 'பெலடி' நடனம்

Added : டிச 01, 2019
Advertisement

சென்னை : பெண்களின் உடலை வலுவாக்கும், 'பெலடி' நடனம், தொடர்ந்து இரண்டு மணி நேரம் நடந்தது.

கோவையைச் சேர்ந்த ஹேமா, பெல்லி நடன வகையைச் சார்ந்த, 'பெலடி' நடன குழுவை உருவாக்கியுள்ளார். இந்த குழுவினர், பெண்களுக்கு விழிப்புணர்வு நடன நிகழ்ச்சியை, சென்னையில் நேற்று நடத்தினர். தொடர்ந்து இரண்டு மணி நேரம் நடந்த நடன நிகழ்ச்சியில், 'ஐரோப்பா, இந்திய கலையில், 20க்கும் மேற்பட்ட பெண்கள், மேடையில் நடனம் ஆட, தரைதளத்தில், 50க்கும் மேற்பட்ட பெண்கள் பயிற்சி பெற்றனர்.இது குறித்து, 'பெலடி' நடனக்குழுவை உருவாக்கிய ஹேமா கூறியதாவது:இந்த நடன நிகழ்ச்சி, இரண்டாவது ஆண்டாக நடைபெறுகிறது.

இவற்றில்,உடற்பயிற்சி சார்ந்த நடனங்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, பெண்களின், தசைகள் வலுப்பெறும் வகையில் நடனம் அமைந்துள்ளது. இதன் வாயிலாக, பெண்களின் உடல் வலுப்பெற்று, ஆரோக்கியமாக வாழ முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X