பொது செய்தி

தமிழ்நாடு

அருங்காட்சியக துறை பஸ் காஞ்சியில் நாளை உலா

Added : டிச 01, 2019
Advertisement
 அருங்காட்சியக துறை பஸ் காஞ்சியில் நாளை உலா

காஞ்சிபுரம் : பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பார்வையிடுவதற்காக, அருங்காட்சியகத் துறை காட்சி பஸ், காஞ்சிபுரத்தில் நாளை உலா வரவுள்ளது.

கிராமப்புற மாணவ - மாணவியரும், அருங்காட்சியகத்தை காணாதோரும், அருங்காட்சியகத்தை காண வேண்டும் என்ற நோக்கத்தில், அரசின் அருங்காட்சியக காட்சி உலா பஸ்சை, அருங்காட்சியகங்கள் துறை ஏற்பாடு செய்துள்ளது.பஸ்சில், தொல்லியல், மானுடவியல், நாணயவியல் மற்றும் கலை பண்பாடு சார்பான காட்சி விளக்கம் இடம் பெற்று உள்ளன.தமிழகத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள்தோறும், மாவட்ட வாரியாக இப்பஸ் சென்று வருகிறது.

அதன்படி, பல்வேறு மாவட்டங்களுக்கு சென்ற பஸ், நேற்று, காஞ்சிபுரம் வந்தது. ஓரிக்கை காது கேளாதோர் பள்ளிக்கு சென்றது.காஞ்சிபுரத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு, நாளை நகர்வலமாக செல்ல உள்ளது.காட்சி உலா பஸ்,காஞ்சிபுரத்தில் எங்கு உள்ளது என்பதை அறிய, 81899 65485 என்ற மொபைல் போன் எண்ணில், காஞ்சிபுரம் அருங்காட்சிய காப்பாட்சியர் உமாசங்கரை தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X