பொது செய்தி

தமிழ்நாடு

மியான்மர் பெண்ணுக்கு மறுவாழ்வு செட்டிநாடு டாக்டர்கள் சாதனை

Added : டிச 01, 2019
Advertisement

சென்னை : உலக நாடுகளைச் சேர்ந்த டாக்டர்களால் கைவிடப்பட்ட மியான்மர் பெண்ணுக்கு, செட்டிநாடு சூப்பர் ஸ்பெஷாலிட்டி டாக்டர்கள், அறுவை சிகிச்சை மேற்கொண்டு மறுவாழ்வு அளித்து உள்ளனர்.

மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர் ஹல ஹல செயின் ஷக்கீனார், 69. இவருக்கு, கல்லீரலுக்கு செல்லும் ரத்தநாள அடைப்பு, இதய கோளாறு இருந்தது. பல்வேறு நாட்டு டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால், இவரது, 100 கிலோ எடை மற்றும் வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அறுவை சிகிச்சை செய்யும் முடிவை டாக்டர்கள் கைவிட்டனர். சென்னையில் உள்ள, செட்டிநாடு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, மருத்துவமனையின் கல்லீரல் சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் காத்திக் மதிவாணன் பரிசோதித்தார்.

பல மணி நேரம் போராடி, அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதால், உளவியல் ரீதியாக, ஹல ஹல செயின் ஷக்கீனாருக்கு தன்னம்பிக்கை அளிக்கப்பட்டது.டாக்டர் கார்த்திக் மதிவாணன் தலைமையில், இதய அறுவை சிகிச்சை துறை இயக்குனர் டாக்டர் சஞ்சய் தியோடர் குழுவினர், உயிருள்ள ஒருவர் அளித்த கல்லீரல் நன்கொடையை வைத்து, 16 மணி நேரம் போராடி, கல்லீரல் மற்றும் இதய அறுவை சிகிச்சையை, ஒரு சேர செய்து சாதனை படைத்தனர்.

இதன் வாயிலாக, உயிருள்ள ஒருவரின் கல்லீரலை வைத்து, அறுவை சிகிச்சை மேற்கொண்டது, தென் மாநிலங்கள் அளவில் முதல்முறை என, டாக்டர்கள் தெரிவித்தனர்.இது குறித்து, ஷக்கினாரின் மகள் கூறுகையில், ''என் தாயை, பல நாடுகளை சேர்ந்த டாக்டர்கள் பரிசோதித்து கைவிட்டனர். செட்டிநாடு சூப்பர் ஸ்பெஷாலிட்டி டாக்டர்கள், என் தாய்க்கு மறுவாழ்வு அளித்துள்ளனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X