தமிழ்நாடு

பீதி! பட்டினப்பாக்கம் கடற்கரையில் ... 2வது நாளாக வெளியேறியது நுரை

Updated : டிச 01, 2019 | Added : டிச 01, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை : 'கடல் அலைகள் நுரை வெளியேற்றும் பகுதிக்கு செல்வோருக்கு, தோல் வியாதி ஏற்படலாம்' என, மாசு கட்டுப்பாடு வாரியம் எச்சரித்து உள்ளது. சென்னை, அடையாறு முகத்துவாரம், பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் கடற்கரை பகுதியில், கடல் அலைகள், நேற்று முன்தினம் முதல், வெள்ளை நிறத்தில் நுரையை வெளியேற்றி வருகிறது. நுரை, கடற்கரை முழுதும் படிந்து மாசடைந்துள்ளதால், சுற்றுச்சூழல்
 பீதி!   பட்டினப்பாக்கம் கடற்கரையில் ...     2வது நாளாக வெளியேறியது நுரை

சென்னை : 'கடல் அலைகள் நுரை வெளியேற்றும் பகுதிக்கு செல்வோருக்கு, தோல் வியாதி ஏற்படலாம்' என, மாசு கட்டுப்பாடு வாரியம் எச்சரித்து உள்ளது.

சென்னை, அடையாறு முகத்துவாரம், பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் கடற்கரை பகுதியில், கடல் அலைகள், நேற்று முன்தினம் முதல், வெள்ளை நிறத்தில் நுரையை வெளியேற்றி வருகிறது. நுரை, கடற்கரை முழுதும் படிந்து மாசடைந்துள்ளதால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விவசாய நிலங்களில், விரீயம் மிகுந்த பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை, அடையாற்றின் வழியாக கடலில் கலப்பதால், நுரை அதிகமாக வெளியேறுவதாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், கடற்கரையில் ஒதுங்கிய நுரையை, மாசு கட்டுப்பாடு வாரியம் ஆய்வு செய்துள்ளது. முதற்கட்ட ஆய்வறிக்கையில், அதிகப்படியான கழிவுநீர் மற்றும் மழைநீர் கடலில் கலந்ததால், அதன் நச்சுத் தன்மையை, கடல் ஏற்க மறுத்து, நுரையாக வெளியேற்றுவதாக, மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:கூவம், பக்கிங்ஹாம், அடையாறு ஆற்றின் வாயிலாக, அதிகளவில் நச்சுத்தன்மை வாய்ந்த கழிவுகள், கடலில் கலந்துள்ளன. அதில், 'பாஸ்பேட், சர்பாக்டான்' வகை ரசாயனங்கள் அதிகளவில் உள்ளன. இதனால், கடல் அலைகள், நுரையை வெளியேற்றுகிறது.

இந்த ரசாயனம் கடற்கரையோரம் இருப்பதால், கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. அதே நிலையில், அப்பகுதிக்கு செல்வோருக்கு, தோல் வியாதி ஏற்படலாம். எனவே, பொதுமக்கள் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-டிச-201913:24:45 IST Report Abuse
Ganesan Madurai கடலுக்கு அறிவு உண்டு. மனிதனுக்கு அறிவு இல்லை..
Rate this:
Cancel
01-டிச-201922:20:26 IST Report Abuse
ராஜன் ஹே மனிதா, நீ கொடுத்த விஸத்தையெல்லாம் ஒன்று திரட்டி உன் மூஞ்சியிலேயே துப்பிவிட்டது கடல். நீ நாசமாய் போக நீயே உனக்கு சூனியம் வைத்துக்கொண்டாய் முட்டாளே.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
01-டிச-201919:03:45 IST Report Abuse
Lion Drsekar என்றைக்குமே சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் தினமலர் வாசகர்கள் கதறி கதறி அழுதாலும் யார் காதுகளிலும் விழாது கண்டு கொள்ளவும் மாட்டார்கள் சாவு, அழுவு என்று வந்தால் மட்டுமே ஆவன செய்து தவறு சேஹவர்களைக் காப்பாற்றுவார்கள், மொத்தத்தில் பாதிப்புக்குள்ளானது பொதுமக்களே , இயற்க்கை ஒன்றே இவர்களுக்கு ஒரே வழி, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X