தமிழகத்தில் பெண்களுக்கான மதுபார் ; வரவேற்பா ? எதிர்ப்பா?

Updated : டிச 01, 2019 | Added : டிச 01, 2019 | கருத்துகள் (59)
Advertisement

மதுரை : மதுரையில் பெண்களுக்கென்று ஸ்பெஷலாக மதுபார் துவங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெண்களுக்காக அமைக்கப்பட்ட முதல் மதுபானக்கடை இதுவே என்று கூறப்படுகிறது.


நமது நாட்டில் மதுபானக்கடைகளை மூட வேண்டும் என்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் உட்பட பலரம் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடிப்பழக்கத்தால் பல குடும்பங்கள் சீரழிந்து போகிறது. குடும்பம் நிலைகுலைந்து அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது. இதனை வலியுறுத்தி அரசு மதுபானக்கடைகளை மூட வேண்டும் அல்லது கடை திறக்கும் நேரம் மற்றும் கடை இருக்குமிடம் ஆகியவற்றையும் மாற்ற வேண்டும் எனவும் பலவித கோரிக்கைகளை வலியுறுத்துகின்றனர்.

பொதுவாக ஆண்கள் மட்டுமே குடிப்பழக்கத்திற்கு அடிமையான நிலை மாறி தற்போது சில இடங்களில் பெண்களும் மது அருந்த துவங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பெண்களுக்கென்று ஸ்பெஷலாக புதிய மதுபார் ஒன்று தமிழகத்தில் துவங்கப்பட்டுள்ளது. மதுரை விஷால் தி மாலில் பெண்கள் மது அருந்த சிறப்பு வசதிகளுடன் புதிய மதுபார் துவங்கப்பட்டது. மதுபானத்திற்கு பெண்கள் செல்வது என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் தொடங்கப்பட்ட முதல் பெண்களுக்கான பார் இதுதான். ஆரம்பத்தில் மதுரை மக்களிடையே இதற்கு கடுமையான எதிர்ப்பு காட்டப்பட்டது. பின் சில ஆண்டுகளுக்குபின் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.

சில பெருநகரங்களில் நட்சத்திர ஓட்டல்களிலும், மற்ற சில பார்ட்டிகளிலும் ஆண்கள் , பெண்கள் என இருவரும் மது அருந்துதை காண முடிகிறது. ஆண்களை தொடர்ந்து பெண்களும் மதுபானத்தை நாடிச் செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், அவர்களின் வசதிக்காக மதுரையில் பிரத்யேக பார் துவங்கப்பட்டுள்ளது தமிழகத்திலேயே இங்குதான். அதுவும் மதுரையில் தான் என்று கூறப்படுகிறது.


Advertisement
வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
07-டிச-201915:42:59 IST Report Abuse
g.s,rajan If both men and women drink and enjoy the situation Who will look after the family ??? g.s.rajan, Chennai.
Rate this:
Share this comment
Cancel
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
04-டிச-201919:01:47 IST Report Abuse
ராஜேஷ் மக்கள் வரிப்பணத்தை திருடியவர்கள் அயோக்கியதாம் செய்வபவர்கள் வெள்ளையும் காக்கியை அணிந்துகொண்டு யோக்கியனைப்போலே நடிக்கிறார்கள் . நேரடியாகவே கல்வி நிர்வணக்களையும் , சாராய ஆலையயையும் நடத்துகிறார்கள் . இந்த மாதுரி போலிகள் நடந்து கவ்வி நிர்வங்களில் எப்படி திருடுவது , எப்படி குடிப்பதுனு தானே சொல்லிகுடுப்பார்கள் . நாளை அவர்கள் தொழில் செழிக்க இன்றே அடித்தளம் இடுகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
04-டிச-201917:09:05 IST Report Abuse
இந்தியன் kumar ஆணுக்கு பெண் இங்கு சரி நிகர் சமானம் என்று நிரூபிக்கிறார்கள் போலும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X