பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர் காவல் படை உறுப்பினர்களுக்கு பயிற்சி

Added : டிச 01, 2019
Share
Advertisement
திருத்தணி : அரசு பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்ட மாணவர் காவல் படை உறுப்பினர்களுக்கு, போலீசார் உடல்பயிற்சி மற்றும் போக்குவரத்து ஒழுங்குப்படுத்துதல் குறித்து, பயிற்சி அளித்தனர். திருத்தணி கல்வி மாவட்டத்தில், 12 அரசினர் மேல்நிலைப் பள்ளிகளில், அரசின் உத்தரவின்படி, மாணவர் காவல் படை உறுப்பினர்கள் ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு பள்ளியிலும், 44 மாணவர்கள் காவல் படையில்

திருத்தணி : அரசு பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்ட மாணவர் காவல் படை உறுப்பினர்களுக்கு, போலீசார் உடல்பயிற்சி மற்றும் போக்குவரத்து ஒழுங்குப்படுத்துதல் குறித்து, பயிற்சி அளித்தனர்.

திருத்தணி கல்வி மாவட்டத்தில், 12 அரசினர் மேல்நிலைப் பள்ளிகளில், அரசின் உத்தரவின்படி, மாணவர் காவல் படை உறுப்பினர்கள் ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு பள்ளியிலும், 44 மாணவர்கள் காவல் படையில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த மாணவர் காவல் படை மாவட்ட எஸ்.பி., நேரடி பார்வையில் செயல்படுகிறது.

இந்நிலையில், திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று, 12 அரசு பள்ளிகளில் இருந்து, மாணவர் காவல் படை உறுப்பினர்கள் வரவழைக்கப்பட்டு, திருத்தணி போலீசார் உடற்பயிற்சி அளித்தனர். தொடர்ந்து, அணிவகுப்பு நடத்தவது குறித்தும், போக்குவரத்து ஒழுங்குப்படுத்துவது குறித்தும், திருத்தணி காவல் உதவி ஆய்வாளர்கள், திவாகர், சிவா ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X