பொது செய்தி

தமிழ்நாடு

'தினமலர் - சக்சஸ் மந்த்ரா' நிகழ்ச்சி திருவள்ளூரில் இன்று நடக்கிறது

Added : டிச 01, 2019
Advertisement

திருவள்ளூர் : பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், தேர்வில் அதிக மதிப்பெண் பெற, தேவையான யுக்திகளை அள்ளித்தரும், 'தினமலர் - சக்சஸ் மந்த்ரா' நிகழ்ச்சி, திருவள்ளூர், சாந்தி மண்டபத்தில், இன்று நடக்கிறது.

புதிய பாடத் திட்டத்தில், பொதுத் தேர்வினை எதிர்கொள்ளும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும், வாழ்க்கையில் சாதனை படைக்கவும், தன்னம்பிக்கை வளர்க்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் சார்பில், 'சக்சஸ் மந்த்ரா - ஜெயித்துக் காட்டுவோம் 2.0' நிகழ்ச்சி நடத்துகிறது. அமிர்தா விஸ்வ வித்யா பீடம் நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சி, திருவள்ளூர், சாந்தி திருமண மண்டபத்தில், இன்று, நடைபெற உள்ளது.

திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, உரையாற்றுகிறார். நிகழ்ச்சியில், புதிய பாடத் திட்டத்தின் முக்கியத்துவம், அணுக வேண்டிய முறை, நுழைவுத் தேர்வுகளுக்கு, புதிய பாடத் திட்டத்தை பயன்படுத்தும் விதம் ஆகியவை குறித்து விளக்கப்படும்.மனப்பாடம் செய்யாமல் புரிந்து கற்பதன் பலன்கள், படிக்கும்போதே கிரியேட்டிவ் சிந்தனைகளை வளர்ப்பதன் அவசியம், சுய கற்றல் மற்றும் ஆழ்ந்த கற்றலை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள், க்யூ.ஆர். கோடு பயன்படுத்தும் வழிமுறை குறித்து, மாணவர்கள், நிகழ்ச்சியில் தெளிவு பெறலாம்.

இன்று, காலை, 8:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில், பங்கேற்கும் அனைத்து மாணவ -- மாணவியருக்கும், முக்கிய குறிப்புகள், வினாக்கள் அடங்கிய புத்தகம் இலவசமாக வழங்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X