பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு பயிற்சி

Added : டிச 01, 2019
Advertisement

திருத்தணி : 'அட்மா' திட்டத்தின் மூலம், விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு குறித்து, ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.

திருத்தணி வட்டாரத்தில், வேளாண் துறையின் கீழ் இயங்கும், 'அட்மா' திட்டத்தின் மூலம், விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு குறித்து, ஒரு நாள் பயிற்சி, திருத்தணியில் நடந்தது. இதில், திருத்தணி உதவி வேளாண் அலுவலர்கள் கவுதம், லிங்கேஸ்வரன், 'அட்மா' திட்ட அலுவலர் அனுஷியா ஆகியோர் பங்கேற்று, பயிர் காப்பீடு குறித்து விளக்கி பேசினர்.

அப்போது, நெல் பயிருக்கு, 2.47 ஏக்கருக்கு, 429 ரூபாய் தொகையை தேசியமயமாக்கபட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கி அல்லது இ--சேவை மையத்தை அணுகி, ஆதார் அட்டை, பட்டா சிட்டா, அடங்கல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகலை கொண்டு செலுத்த வேண்டும். பிரீமியம் செலுத்திய பட்சத்தில் இயற்கை சீற்றத்தால் பயிருக்கு ஏதேனும் இழப்பு ஏற்பட்டால், 28 ஆயிரத்து, 650 ரூபாயை ஓரியண்டல் இன்சுரன்ஸ் கம்பெனி மூலம் பெறலாம் என, வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விவசாயிகளுக்கு, பயிர் காப்பீடு அவசியம் குறித்து, ஆடல், பாடல் நிகழ்ச்சியின் மூலம் விளக்கப்பட்டது. இதில், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X