பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்...

Added : டிச 01, 2019
Advertisement

கோவிலுக்கு வஸ்திரம் வழங்கல்காஞ்சிபுரம்: திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவிலில், கார்த்திகை தீபப்பெருவிழா, இன்று, கொடியேற்றத்துடன் துவங்கி, வரும், 10ம் தேதி காலையில், பரணி தீபமும், மாலையில், மஹா தீபத்திருவிழா நடைபெறுகிறது.இவ்விழாவிற்கு, காஞ்சிபுரம் திருவண்ணாமலை கிரிவலக்குழுவினர், 16வது ஆண்டாக, அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலை அம்மனுக்கும் சாற்றுவதற்காக, கோவில் மணியக்காரரிடம், வஸ்திரங்கள் வழங்கினர்.சிறுவர்கள் காப்பகத்தில் விழிப்புணர்வுகாஞ்சிபுரம்: தனியார் சிறுவர்கள் காப்பகத்தில் சமூக பாதுகாப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.காஞ்சிபுரம் அடுத்த, ஒட்டந்தாங்கல் பகுதியில், தனியார் சிறுவர்கள் காப்பகம் இயங்கி வருகிறது.இங்கு தங்கி படிக்கும் சிறுவர்களுக்கு, சட்டங்கள் குறித்தும், குழந்தைகள் நலன், குழந்தைகள் உரிமம், அரசின் நலத்திட்டங்கள் உள்ளிட்டவை குறித்தும் விளக்கப்பட்டது.நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தைகள் நல குழும உறுப்பினர் சக்திவேல் பங்கேற்று, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். காப்பகப் பணியாளர்கள், பெற்றோர், மாணவர்கள், பாதுகாவலர் என, பலர் பங்கேற்றனர்.என்.எஸ்.கே., பிறந்த நாள் விழாகாஞ்சிபுரம்: உலகப் பொதுமறை திருக்குறள் பேரவை சார்பில், என்.எஸ்.கே., என, அழைக்கப்படும், நடிகர் கலைவாணர் நா.சு.கிருஷ்ணனின், 112வது பிறந்த நாள் விழா, காஞ்சிபுரம் அரசு கா.மு.சுப்பராய முதலியார் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.தொன்மை நகர அரிமா சங்க முன்னாள் தலைவர் சி.என்.ஆனந்தன், மாணவர்களிடம், கலைவாணரின் வாழ்க்கை வரலாறு குறித்து விளக்கம் அளித்தார். என்.எஸ்.கே., குறித்து, கேள்விகள் கேட்கப்பட்டு, மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மின் தொழிலாளர்கள் கூட்டம்காஞ்சிபுரம்: பாரதிய மின் தொழிலாளர்கள் சம்மேளனம், காஞ்சிபுரம் கிளை சார்பில், வேலை நிறுத்த போராட்டம் குறித்த ஆலோசனை கூட்டம், காஞ்சிபுரத்தில் நடந்தது.தமிழ்நாடு மின்வாரியத்தில் உள்ள பணியாளர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்து, உடனடியாக முத்தரப்பு ஒப்பந்தம் செய்ய வேண்டும். காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.களப்பிரிவு பணியாளருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 9ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது குறித்து தீர்மானிக்கப்பட்டது.இன்று கண் சிகிச்சை முகாம்காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கழுநீரோடை வீதியில் உள்ள, ஜெயின் கோவிலில், இன்று, காலை, 10:00 முதல், பகல், 1:00 மணி வரை, கண் சிகிச்சை இலவச முகாம் நடைபெறுகிறது.பெரிய காஞ்சிபுரம் ஜெயின் இளைஞர் சங்கம், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை, காஞ்சிபுரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து, முகாமை நடத்துகின்றன.இதில், கண்ணில் குறைபாடு உள்ளவர்கள் அனைவரும் பங்கேற்கலாம். கண்புரை நோய் உள்ளவர்களுக்கு, இலவசமாக, விழிலென்ஸ் பொருத்தி, அறுவை சிகிச்சை செய்யப்படும்.முன் பதிவுக்கு, 95854 30666 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.213 பயனாளிகளுக்கு கடன்காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள இந்தியன் வங்கி மூலம், சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோருக்கு, கடன் வழங்கும் முகாம், 15 நாட்களாக நடந்தது.நிறைவு நாளான நேற்று, 213 பயனானிகளுக்கு, 34 கோடி ரூபாய்க்கு கடன் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், இந்தியன் வங்கி பொது மேலாளார் சந்திரா ரெட்டி பங்கேற்று, பயனாளிகளுக்கு கடன் தொகையை வழங்கினார்.வரைவோலை மாதிரி வழங்கல்மாமல்லபுரம்: கல்பாக்கம் அடுத்த, கடலுார் - வாயலுார் பாலாற்றில், நீர்செறிவூட்டல் தடுப்பணையை, அணுசக்தித் துறையின், 32.5 கோடி ரூபாயில் பொதுப்பணித் துறை அமைத்துள்ளது.நேற்று முன்தினம், செங்கல்பட்டு மாவட்ட துவக்க விழாவில், முதல்வர் இ.பி.எஸ்., தடுப்பணையை, பயன்பாட்டிற்கு துவக்கினார்.அணுசக்தித் துறை, இந்திராகாந்தி அணு ஆராயச்சி மைய இயக்குனர், அருண்குமார் பாதுரி, நிதி வழங்கிய அடையாளமாக, முதல்வரிடம், வங்கி வரைவோலை மாதிரியை வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X