எய்ம்ஸ் வங்கி கணக்கில் ரூ.12 கோடி செக் மோசடி

Updated : டிச 01, 2019 | Added : டிச 01, 2019 | கருத்துகள் (3)
Advertisement

புதுடில்லி: போலி செக்குகள் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சொந்தமான வங்கி கணக்குகளில் இருந்து ரூ 12 கோடி மோசடி செய்து சுருட்டியுள்ளனர்.






டெஹ்ராடூன் மற்றும் மும்பையில் உள்ள எஸ்.பி.ஐ., வஙகியில் எய்ம்ஸ் மருத்துவமனையின் வங்கி கணக்குகளிலிருந்து போலி செக்குகளை கொடுத்து ரூ 12 கோடிக்கும் மேலாக மர்மநபர்கள் பணத்தை எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கண்ட இரு வங்கிகளில் பணம் மோசடி செய்யப்பட்டது தெரிந்ததால், போலி செக்குகள் மூலம் மேலும் பண மோசடி செய்வது தடுக்கப்பட்டது. இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை, டெல்லி போலீசார் உதவியை நாடியுள்ளது. மேலும், எய்ம்ஸ் நிர்வாக அதிகாரிகள் இந்த மோசடியில் சம்பந்தப்பட்டிருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கையெழுத்து மோசடி நடந்துள்ளதாக எய்ம்ஸ் நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

போலி செக்குகளின் வரிசை எண்களை கொண்ட ஒரிஜினல் செக்குகள் எய்ம்ஸ் வசம் உள்ளது.எஸ்.பி.ஐ., வங்கி செக்குகளை சரியாக சோதனை செய்து பணம் வழங்கவில்லை என்று எய்ம்ஸ் தரப்பில் வங்கி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதனால் மோசடி செய்யப்பட்ட பணத்தை மருத்துவமனையின் வங்கி கணக்கில் எஸ்.பி.ஐ., வங்கி திரும்ப செலுத்த வேண்டும் என்று எய்ம்ஸ் நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.





கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் ரூ 7 கோடி எய்ம்ஸ் கல்வி நிறுவனத்தின் முதன்மை கணக்கிலும், ரூ 5 கோடி பணம் டீன் வங்கி கணக்கிலும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து நாட்டிலுள்ள அனைத்து எஸ்.பி.ஐ., வங்கி கிளைகளுக்கும், அதிக பண மதிப்பிலான எய்ம்ஸ் மருத்துவமனை செக்குகள் பரிமாற்றப்படுவதில் ஊழியர்கள் கவனமாக இருக்கும் படி வாட்ஸ்அப் மூலம் சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-டிச-201919:46:52 IST Report Abuse
ஆப்பு குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப் படாத வரை குற்றங்கள் குறையாது. ஆனாலும் இது நேர் செஞ்ச சதியா இருக்குமோ?
Rate this:
Share this comment
Cancel
Raj - Chennai ,இந்தியா
01-டிச-201909:04:51 IST Report Abuse
Raj சட்டம் கடுமையாக இல்லை. அதனால் கொள்ளை அடித்து விட்டு வெளியே வந்து விடும் நிலையில் யாரும் பயப்படுவது இல்லை. அரசன் அன்று கொல்லுவான் என்பது வெறும் பழமொழியாகவே உள்ளது
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
01-டிச-201904:34:37 IST Report Abuse
J.V. Iyer ஜெகதலகில்லாடிகள் நாட்டில் பெருகிவிட்டார்கள். நேர்மையானவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. நாம் எங்கே செல்கிறோம்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X