பா.ஜ.,வை ஓட விட்ட பவார்

Updated : டிச 08, 2019 | Added : டிச 01, 2019 | கருத்துகள் (83)
Share
Advertisement
மஹாராஷ்டிர சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட சில மணி நேரத்திலேயே, தேசியவாத காங்., மூத்த தலைவரும், துணை முதல்வருமான அஜித் பவார் பதவி விலகினார். அவரைத் தொடர்ந்து, பா.ஜ., முதல்வர் தேவேந்திர பட்னவிசும் பதவியை ராஜினாமா செய்தார். கடைசியில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு தேவையில்லாமல் போனது. எப்படியும் பெரும்பான்மையை நிரூபித்து விடுவோம்
B.J.P,BJP,Bharatiya Janata Party,பா.ஜ, பவார், தி.மு.க., - எம்.பி.,,

மஹாராஷ்டிர சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட சில மணி நேரத்திலேயே, தேசியவாத காங்., மூத்த தலைவரும், துணை முதல்வருமான அஜித் பவார் பதவி விலகினார். அவரைத் தொடர்ந்து, பா.ஜ., முதல்வர் தேவேந்திர பட்னவிசும் பதவியை ராஜினாமா செய்தார். கடைசியில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு தேவையில்லாமல் போனது. எப்படியும் பெரும்பான்மையை நிரூபித்து விடுவோம் என்ற நம்பிக்கையில் பா.ஜ., இருந்தது. ஆனால், மஹாராஷ்டிராவில், அரசியல் சாணக்யர் என அழைக்கப்படும் சரத் பவார், பா.ஜ.,விற்கு வேட்டு வைத்துவிட்டார்.சரத் பவார் குடும்பம் பெரிது. பலரும், பல தொழில்களை நடத்தி வருகின்றனர். யார் எந்த கட்சியில் இருந்தாலும், குடும்ப உறுப்பினர்களின் தொழில் பாதிக்கக் கூடாது என்பது தான், சரத் பவாரின் ஒரே குறிக்கோள்.அஜித் பவார், பா.ஜ.,வுடன் கை கோர்த்ததுமே, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், ஒருவர் பின் ஒருவராக அஜித் பவாரிடம் தொடர்பு கொண்டு, 'நீ இப்படி செய்தது சரியில்லை; நம் குடும்பத்தை நினைத்துப் பார், பிசினஸ் முக்கியம்' என, 'அட்வைஸ்' செய்தனர். அஜித் பவாரோ மசியவில்லை.ஆனால், சரத் பவாரின் மனைவி பிரதிபா, அஜித் பவாருடன் பேசினார். பிரதிபாவை, தன் தாயாக நினைப்பவர் அஜித் பவார். சித்தி மீதிருந்த பாசத்தாலும், அவருடைய அன்பான வேண்டுகோளாலும் மனம் மாறினார். 'உனக்கு வேண்டிய பதவியை, நான் வாங்கி தருகிறேன்; நீ திரும்ப வந்துவிடு' என சித்தி உறுதி மொழி அளித்த பின், பா.ஜ.,வை கழற்றிவிட்டார் அஜித் பவார்.


அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!

மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது மற்றும் ஆட்சி நடத்த, குறைந்தபட்ச செயல் திட்டம் தயாரிப்பது குறித்து ஆலோசிக்க, சீனியர் காங்., தலைவர்கள் அகமது படேல், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் மும்பை சென்றனர். அங்கே, தேசியவாத காங்., மற்றும் சிவசேனா கட்சி தலைவர்களை சந்திக்க, அவர்கள் விலை உயர்ந்த, பி.எம்.டபிள்யு., சொகுசு காரை பயன்படுத்தினர். இந்தக் கார், மிகவும் பிரபலமான ஒரு ஜுவல்லரி நிறுவனத்துக்கு சொந்தமானது. இந்த நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர், உள்ளூர் பா.ஜ., தலைவர். இவர், 2014 மஹாராஷ்டிர சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, 580 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார். மாநிலம் முழுக்க போட்டியிட்ட வேட்பாளர்களில், பணக்காரர் இவர் தான். அப்போது, இவருடைய சொத்து மதிப்பு, 350 கோடி ரூபாய். இந்த பா.ஜ., தலைவர் மீது, பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. பல வங்கிகளில், கோடிக் கணக்கில் கடன் வாங்கி, திருப்பிச் செலுத்தவில்லை. இதனால், இவருடைய சொகுசு பங்களா ஜப்தி செய்யப்பட்டது. இவர், பா,ஜ.,வின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிசுக்கு ரொம்ப நெருக்கம். அப்படியிருக்கையில், இவருடைய காரை, காங்கிரஸ் தலைவர்கள் எப்படி பயன்படுத்தினர் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.மஹாராஷ்டிராவில், பா.ஜ., ஆட்சி போய், சிவசேனா-, தேசிய வாத காங்., -காங்., கூட்டணி ஆட்சி வரும் என ஊகித்து, இந்தப் பக்கம் தாவி விட்டார் என்கின்றனர் உள்ளூர் பா.ஜ., தலைவர்கள். அதோடு வழக்குகளிலிருந்து தப்பிக்கவும், இந்த பா.ஜ., தலைவர், காங்கிரசுக்கு உதவியிருக்கலாம் என, அவர்கள் சந்தேகிக்கின்றனர். அரசியலில் எதுவும் நடக்கலாம்.


தி.மு.க., - எம்.பி.,க்களின் கவலை

சிவசேனா ஹிந்துத்வா கொள்கையுள்ள கட்சி என்பது அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, மஹாராஷ்டிராவின் முதல்வராக பதவியேற்ற விழாவிற்கு, தங்கள் கட்சி தலைவர் ஸ்டாலின் சென்றது சரிதானா; இதனால், கட்சியின் முஸ்லிம் ஓட்டு வங்கி பாதிக்குமா என்றெல்லாம், தி.முக., - எம்.பி.,க்கள் கவலையுடன் பேசி வருகின்றனர். டில்லியில், பார்லி.,யின் சென்ட்ரல் ஹாலில், கட்சி பாகுபாடு இல்லாமல், அனைத்து கட்சி எம்.பி.,க்களும் சாப்பிட்டுக் கொண்டு, வம்பளந்து கொண்டிருப்பர். தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மஹாராஷ்டிர முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட அன்று, சென்ட்ரல் ஹாலில், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், தி.மு.க., - எம்.பி.,க்களை வம்புக்கிழுத்தனர். 'இனி உங்களுக்கு முஸ்லிம் ஓட்டுகள் எப்படி கிடைக்கும்' என தி.மு.க.,- - எம்.பி.,க்களிடம் அ.தி.மு.க.,வினர் கேட்க, 'இந்த கூட்டணியில், காங்கிரசும் இருப்பதால், எங்களுக்கு எந்த பாதிப்பும் வராது' என சில எம்.பி.,க்கள் பதில் அளித்தனர்.வேறு சிலர், 'எங்கள் கட்சியை, ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி என, எப்போதும் பிரசாரம் செய்து வருகின்றனர்; இந்த விழாவில், எங்கள் தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டதால், நாங்கள் ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்பதை நிரூபித்துவிட்டோம்' என்றனர்.ஆனால் மற்ற சிலரோ, 'தளபதி எதற்காக இந்த விழாவில் கலந்து கொண்டார்; காங்., தலைவர் சோனியா, ராகுல், மேற்கு வங்க முதல்வர் மம்தா என, யாருமே கலந்து கொள்ளவில்லையே; இது, பின்னால் நிச்சயம் பிரச்னையை உண்டாக்கும்' என கவலைப்படுகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian - COIMBATORE,இந்தியா
06-டிச-201915:26:18 IST Report Abuse
Indian பார்த்த மாதிரி சொல்லுறாங்களே?????
Rate this:
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
01-டிச-201921:02:39 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN பெருவாரியாக மக்கள் விரும்பின கட்சி பா.ஜ.க. என்பதை மறந்து பேசாதீர்கள் வீராப்பு. பின்னால் உள்ளது அவர்களுக்கு நல்ல பேர்.
Rate this:
Ranga - paapaanpuram,இந்தியா
03-டிச-201905:52:09 IST Report Abuse
Rangaஅது எங்கடா பெருவாரியான மக்கள் விரும்பும் கட்சி?...
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
01-டிச-201919:18:17 IST Report Abuse
Sampath Kumar பிஜேபி இனியாவது விழித்து கொள்ளும் என்று நம்புகிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X