பொது செய்தி

தமிழ்நாடு

மின் பயன்பாடு மீட்டர்: வாரியம் விலை வெளியீடு

Added : டிச 01, 2019
Advertisement
மின் பயன்பாடு, மீட்டர், வாரியம், விலை, வெளியீடு

சென்னை: மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும் மீட்டரை எந்த நிறுவனங்களிடம் இருந்து எந்த விலைக்கு வாங்கலாம் என்ற விபரத்தை மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் வீடு உள்ளிட்ட கட்டுமானங்களுக்கு புதிய மின் இணைப்பு வழங்கும் போது மின் வாரியம் சார்பில் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க மீட்டர் பொருத்தப்படுகிறது. இந்த மீட்டரை மின் வாரியம் சப்ளை நிறுவனங்களிடம் இருந்து வாங்குகிறது. இதற்காக நுகர்வோரிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதுகுறித்து மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்து ஏதேனும் ஒரு காரணத்தால் மீட்டர் வழங்க தாமதம் ஏற்பட்டதால் நுகர்வோர் தங்களுக்கு தேவைப்படும் மீட்டர்களை சப்ளை நிறுவனங்களிடம் நேரடியாக வாங்கி கொள்ளலாம். இதற்காக எந்த நிறுவனங்களிடம் இருந்து எந்த விலைக்கு வாங்கலாம் என்ற விபரம் வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி ஒரு முனை மின் இணைப்பிற்கான மீட்டரை 670 ரூபாய்க்கு வாங்கலாம்.
இதேபோல் மும்முனை உள்ளிட்ட ஒவ்வொரு வகை மீட்டரின் விலையும் வெளியிடப்பட்டு உள்ளது. மீட்டர் வாங்கிய பின் அந்த விபரத்தை நுகர்வோர் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். அதை பரிசோதித்து வாரிய ஊழியர்கள் பொருத்துவர். இதற்கான தொகை மின் பயன்பாட்டு கட்டணத்தில் கழித்து கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X