உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி ; நிர்மலா சீதாராமன்

Updated : டிச 01, 2019 | Added : டிச 01, 2019 | கருத்துகள் (7)
Advertisement

மும்பை : மும்பையில் எக்கனாமிக் டைம்ஸ் விழாவில் பொருளாதார மந்தநிலை, வரிவிதிப்பு போன்ற முக்கிய பிரச்னைகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.


மும்பையில் நேற்று எக்னாமிக் டைம்ஸ் விருதுகள் வழங்கும் விழா நடந்தது. அதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் பேசியதாவது: பிரதமர் மோடியின் அரசு வணிகங்களை ஆதரிப்பதற்கும், நடந்து வரும் பொருளாதார மந்தநிலையைத் திருப்புவதற்கும்முயற்சி எடுத்து வருகிறது.

அடுத்த 5 ஆண்டு திட்டத்தில் உள்கட்டமைப்பு பணிகளுக்காக 100 டிரில்லியன் டாலரை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் நாட்டில் முதலீடுகளை அதிகரிப்பதுடன் அனைத்து அத்தியாவசிய பொருட்களிலும் ஜிஎஸ்டியை குறைந்தபட்ச நிலைக்கு கொண்டு வருவதற்கும், மற்ற விகிதங்களை ஆய்வு செய்வதற்கும் அரசு துணைநிற்கும்.

மேலும் டிச.,15க்குள் முதலீடு செய்வது குறித்த முதல் 10 திட்டங்களை அரசு அறிவிக்கும். ஏழைகளின் வாழ்வை பாதிக்கும் வரியை பகுத்தாய்வு செய்வது தொடர்பாக அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கு விலக்கு அளிக்காவிட்டால் குறைப்பதற்காவது நடவடிக்கை எடுக்கப்படும். சரக்கு மற்றும் சேவை வரிகளை எளிதாக்குவது குறித்து மத்திய அரசு, மாநில அரசுகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது.

நாடு முழுவதும் உள்ள அதிகாரிகளை சந்தித்து வரிவிதிப்பு தொடர்பான பிரச்னைகள் குறித்து பேசி வருகிறோம். வங்கி அல்லாத கடன் வழங்குநர்களுக்கும் நுகர்வோருக்கும் போதுமான பணப்புழக்கத்தை எளிதாக்குவதற்கான அரசாங்கத்தின் அணுகுமுறை மிகப்பெரிய வெற்றியாகும். இதன் விளைவாக நவராத்திரி மற்றும் தீபாவளி வாரங்களில் 2.5 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான கடன் வழங்கப்பட்டது. இது வங்கி அல்லாத கடன் வழங்குபவர்களுக்கும் வீடு மற்றும் வாகன வாங்குபவர்களுக்கும் பயனளித்துள்ளது.

ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை குறைப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டு பண ஊக்கத்தை அளிப்பதாகவும் உள்ளது. அதே நேரத்தில் மத்திய அரசு சமீபத்திய மாதங்களில், வங்கி அல்லாத துறையில் பணப்புழக்க நெருக்கடியை எதிர்கொள்ளவும், உயர்த்தவும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்தது.
அக்., மாதத்தில் நிதி பற்றாக்குறை 102 சதவீதம் இருக்கிறது. கடந்த ஆண்டில் 104 சதவீதத்துக்கும் குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளினால் புதிய தொழில் வாய்ப்புகளும் ஏற்படும். இதனால் நாட்டின் பொருளாதாரத்திலும் முன்னேற்றம் ஏற்படும். இவ்வாறு கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
01-டிச-201919:16:32 IST Report Abuse
Sampath Kumar நான் காலி செய்ய மாட்டேன் ஏன் எதுக்கு ? பதில் சொல்
Rate this:
Share this comment
Cancel
mohan - chennai,இந்தியா
01-டிச-201912:37:13 IST Report Abuse
mohan இப்பொழுதுள்ள வரி படிவங்கள், எளிமையான முறையில் இல்லை, எங்கள் ஊரில் எங்கள் ஆடிட்டர் தான் பெரிய ஆடிட்டர். பல வாடிக்கையாளர்களுக்கு, பணம் திரும்ப வருவது, வருட மாகியும், திரும்ப வரவில்லை.. பலதடவை , பெங்களூரு cpc ஐ தொடர்பு கொண்டு, ஒவ்வொரு படிவமாக சரிபார்த்தல், ஒரு சின்ன தவறு, அதை தவறு என்று சொல்ல முடியாது.. ஒரு புதிய வரி முறையை கொண்டு வரும் போது, எல்லா தொழில் உள்ள ஊர்களிலும், சிறப்பு பயிற்சி முகாம் வைத்து, எல்லா ஆடிட்டர் மற்றும், அவர்களது உதவியாளர்களை, வைத்து சொல்லி கொடுக்க வேண்டும்.. இந்த பயிற்சி பெரிய அளவில் உள்ள ஊர்களில், ஏதாவது சந்தேகம் இருந்தால், உடனுக்குடன் தீர்த்து வைக்கும் ..அளவுக்கு, அரசின் வரி துறையின் நபர் இருக்கவேண்டும்.. உள்ளூரில் உள்ள வருமான வரி அலுவகத்தில் கேட்டால், எங்களுக்கு தெரியாது,. நீங்கள் on லைன் இல் செக் பண்ணி பார்க்கவும் என்று சொல்லி விடுகின்றனர். கடந்த மூன்று மாதங்களாக online நம்பர் சரியாக வேலை செய்ய வில்லை. இந்த மாதம் தான் வேலை செய்திருக்கிறது. எடுத்த நபர்கள் சந்தேகம் தீர்த்து வைத்து, வரி திரும்ப கிடைத்து இருக்கிறது. இந்த அளவுக்கு எல்லா தரப்பினரும், பின் சென்று பார்க்க முடியாது. பல நபர்கள், தவறாக நினைத்து கொண்டு இவ்வளவு தான்ய..பணம் திரும்ப வராது என்று சும்மா இருந்து விடுகின்றனர்... நாங்கள் கட்சியையோ, ஆட்சியையோ, குறை சொல்ல வில்லை, எல்லோரும், நல்ல மனிதர்கள்தான். அவர்களும், எல்லா தரப்பினருக்கும், ஈடு கொடுக்க வேண்டும். ஆனால், அடிப்படை, மக்களிடம், பண புழக்கம் இருந்தால் தான், பொருளாதார சுழற்சி என்பது, எல்லோருக்கும், தெரிந்த விஷயம்... gst வரி முறையை, எளிமை படுத்தி, எல்லா தரப்பினரும், ஒரு சதவிகித, அல்லது என்ன முறையான திரும்ப பெற முடியாத முறையாக இருக்க வேண்டும்...அப்பொழுதுதான், தொழில் பண புழக்கம் அதிகரிக்கும். பல நிறுவனங்கள் வேலை இழந்த நிலையில், நாட்டின் பொருளாதார சக்கரம் எப்படி சுழலும்...உலக பொருளாதாரம், என்னவாவது ஆகி விட்டு போகிறது. நீங்கள் உள்ளூர் பொருளாதாரம் பற்றி யோசியுங்கள்.. இலவசத்தை முறை படுத்துங்கள், இலவசம் நாட்டின் விஷ கொல்லி. இலவசங்களினால், நாட்டின் அடிப்படை விலை வாசி உயர்ந்து, அதனால், சம்பளங்கள் உயர்ந்து, அதனால், உலக அளவில், இந்தியா நிறுவனங்கள் போட்டியிட முடியாமை... இன்னும் பல விஷயங்கள் உள்ளன.. இதை எல்லாம் சரி செய்தால் தான், நாட்டின் பொருளாதாரம் உயரும்... நாம் புதிய முறையை ஒரே நாளில் கொண்டு வந்து விடுகிறோம். அனால், அதன் விளைவுகள், நாட்டின், ரன்னிங் கேப்பிடலை, தின்று விடுகிறது.. தொடர்ந்து , தொழில் நடத்த முடியாமை... தொழில் என்கின்ற தங்க முட்டையிடும்(வரி) வாத்தை, ஒரே நாளில் அறுத்து, எல்லா தங்க முட்டையையும் (வரி) எடுத்து விட்டால், தொழில் என்கின்ற வாத்து செத்து விடும்...நண்பர்களே யாரும், தயவு செய்து மேற் சொன்ன விஷயங்களை, தவறாக அல்லது விமர்சனமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். சற்று ஆழமாக யோசித்து பாருங்கள்...
Rate this:
Share this comment
Cancel
Suri - Chennai,இந்தியா
01-டிச-201911:09:41 IST Report Abuse
Suri ஏம்மா.....நீங்கள் இன்னும் கிளம்பவில்லையா??? இன்னும் என்னை ( எங்களை ) என்ன செய்யப்போகிறாய்??????? சீரழித்தது போதவில்லையா?? இன்னும் பொருளாதாரம் எவ்வளவு கீழே சென்றால் நீங்கள் இடத்தை காலி செய்வீர்கள்????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X