பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் பரவலாக பலத்த மழை

Updated : டிச 01, 2019 | Added : டிச 01, 2019
Advertisement

சென்னை: தமிழகத்தில் இன்று (டிச.01) பரவலாக பலத்த மழை பெய்தது. மதுரை, சென்னை, கோவை, குமரி, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டியது. பலத்த மழையின் காரணமா பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.







மழை பதிவு


ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தில் 11 செ.மீ., திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் திருத்துறைப்பூண்டியில் அதிக பட்சமாக 10 செ.மீ., மழை பதிவானது. நீடாமங்கலம், முத்துப்பேட்டையில் 9 செ.மீ., பாண்டவையாறு தலைப்பில் 8 செ.மீ., மழை பதிவானது.
சென்னையில் விடிய விடிய பெய்த மழையால் சாலைகளில் நீர் தேங்கியுள்ளது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை வந்தவாசி, நெற்குணம், தொள்ளார், கடலூர் மாவட்டம் கடலூர், சிதம்பரம், தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சை, மயிலை பகுதிகளிலும் மதுரை மாவட்டம் மேலூர், திருவாதவூர், ஒத்தக்கடை, சிட்டம்பட்டி, கொட்டாம்பட்டி பகுதிகளிலும் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது.





கனமழையால் தூத்துக்குடி ரயில்நிலையத்தில் தண்டவாளம் நீரில் மூழ்கியதால் மேலூர் ரயில் நிலையத்தில் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. விருதையில் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடலூர் வடலூர் இடையே ரோமபுரி சாலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து பாதி்ப்பு அடைந்துள்ளது. குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X