பொது செய்தி

தமிழ்நாடு

கொட்டி தீர்க்கும் கனமழை : வேகமாக நிரம்பும் அணைகள், ஏரிகள்

Updated : டிச 01, 2019 | Added : டிச 01, 2019 | கருத்துகள் (7)
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை : தமிழகம் முழுவதும் தொடர்ந்து கொட்டி தீர்த்து வரும் கனமழையால் அணைகள், ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அணை மற்றும் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி வருவதால் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு,பல பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. கடலூரில் பெய்து வரும் கனமழையால் வீராணம் ஏரி முழு கொள்ளளவான 47.50 அடியில், 47 அடியை எட்டி உள்ளது. இதனால் ஏரியில் இருந்து 5300 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னையின் குடிநீர் தேவைக்காக 74 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. சென்னை அருகே செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் ஒரே நாளில் 1000 மில்லியன் கனஅடி உயர்ந்துள்ளது. மழை காரணமாக ஏரிக்கு 1182 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. தஞ்சை கீழணையில் இருந்து பாதுகாப்பு கருதி கொள்ளிடம் ஆற்றில் 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. ஈரோடு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.98 அடியாகவும், நீர்இருப்பு 32.7 டிஎம்சி.,யாகவும் உள்ளது.
கன்னியாக்குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணை, முழு கொள்ளளவான 48 அடியில் 45 அடியை எட்டி உள்ளது. அணைக்கு நீர்வரத்து 2200 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 1000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டம் பாபநாசம் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் அணையில் இருந்து விநாடிக்கு 6673 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. நெய்வேலி அருகே ரோமாபுரியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் கடலூர்-சேலம் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கனமழை, வெள்ளப் பெருக்கு காரணமாக திற்பரப்பு, குற்றாலம், சுருளி அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
02-டிச-201906:53:21 IST Report Abuse
kalyanasundaram RAIN WATER NOT SAVED AS MOST OF THE WATER BODIES ARE OCCUPIED BY RESIDENTIAL FLATS MOSTLY OWNED BY CORRUPT PERSONS. AFTER SOME MONTHS TIME FOR BEGGING NEIGHBORING STATES . BUT CLOUD SEEDING NOT DONE HENCE FEW LOST TONS ON MONEY .GOD SAVE TAMIL NDU
Rate this:
Share this comment
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
01-டிச-201920:30:41 IST Report Abuse
Krishnamurthy Venkatesan இனிமேலும் தமிழகத்தில் வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு என்று கூக்குரலிட்டால் வருண பகவானின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டி வரலாம். எனவே கடலில் வீணாக போகாமல் சேமியுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
01-டிச-201919:07:25 IST Report Abuse
Sampath Kumar மழையே நன்றி அனால் இந்த நன்றி கேட்ட மாந்தர்கள் உன்னை கடலுக்கு அனுப்பி சந்தோசம் கொள்வார்கள் இதை தான் நாங்கள் வருஷ வருஷம் பாக்கின்றோம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X