பொது செய்தி

தமிழ்நாடு

ஐயப்ப சுவாமி பக்தர்கள் குழு சார்பில் அன்னதானம்

Added : டிச 01, 2019
Advertisement

ஈரோடு: ஐயப்ப சுவாமி பக்தர்கள் குழு சார்பில், 22வது ஆண்டாக அன்னதானம் நடந்தது. ஈரோடு, கைகோளன் தோட்டம், செல்வவிநாயகர், ஐயப்பன் மணிகண்ட சாமி, அன்னதான குழு சார்பில், 22ம் ஆண்டு அன்னதான விழா, கைகோளன் தோட்டம் ஆயிர நகர வைசியர் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. அலங்கரிக்கப்பட்ட, 18 படியில் சுவாமி ஐயப்பன் மலர் அலங்காரத்தில் அருள் பாலித்தார். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும், ஸ்ரீஐயப்பன் துதி புத்தகம், கனி பிரசாதம் வழங்கப்பட்டது. காலை தொடங்கி மாலை வரை நடந்த அன்னதானத்தில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதாக, அன்னதான குழுவினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X