ஈரோடு: ஈரோட்டில், அதிகபட்ச மழையளவு பதிவானது. ஈரோடு மாவட்டத்தில், சில தினங்களாக பரவலாக லேசாக அவ்வப்போது மழை பெய்கிறது. நேற்று முன்தினம் ஈரோட்டில், அதிகபட்சமாக, 10 மி.மீ., மழை பதிவானது. மழை தொடர்ந்து பெய்யாமல் விட்டு, விட்டு பெய்ததால், மக்கள் சலிப்படைத்தனர். நேற்று காலை நிலவரப்படி, பிற இடங்களில் பெய்த மழை அளவு விபரம் (மி.மீ.,ல்): பெருந்துறை, 7, சத்தி, 1.4, பவானிசாகர், 1.2, பவானி, 2, சென்னிமலை, 4.
Advertisement