பொது செய்தி

தமிழ்நாடு

மாரியம்மன் கோவில் குண்டம் விழா: அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

Added : டிச 01, 2019
Share
Advertisement
ஈரோடு: கருங்கல்பாளையம் மாரியம்மன் கோவில் குண்டம் விழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள், அலகு குத்தி ஊர்வலமாக வந்தனர். ஈரோடு மாநகரில், பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான, கருங்கல் பாளையம் சின்னமாரியம்மன், பெரியமாரியம்மன் கோவில் குண்டம் தேர்திருவிழா கடந்த, 19ல் பூச்சாட்டுதலுன் தொடங்கியது. பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள், வேல், மயில், நாவலகு குத்தியும், அக்னி சட்டி

ஈரோடு: கருங்கல்பாளையம் மாரியம்மன் கோவில் குண்டம் விழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள், அலகு குத்தி ஊர்வலமாக வந்தனர். ஈரோடு மாநகரில், பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான, கருங்கல் பாளையம் சின்னமாரியம்மன், பெரியமாரியம்மன் கோவில் குண்டம் தேர்திருவிழா கடந்த, 19ல் பூச்சாட்டுதலுன் தொடங்கியது. பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள், வேல், மயில், நாவலகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தியும், நேற்று ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழா முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி, நாளை நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர். தள்ளுமுள்ளு ஏற்படாமல், நிகழ்ச்சியை பக்தர்கள் காணும் வகையில், குண்டம் அருகில் மூங்கில் கேலரி அமைக்கும் பணி, நேற்று தீவிரமாக நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X