பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - ஈரோடு

Added : டிச 01, 2019
Advertisement

உடைந்த மூடி; உமிழும் கழிவு: ஈரோடு, பெருந்துறை சாலையில், மூன்று இடங்களிலும், சம்பத் நகர் கலெக்டர் வீட்டின் அருகேயும் பாதாள சாக்கடை மூடியை, தரமற்று அமைத்துள்ளனர். மூடி உடைந்து, இதனால் கழிவுநீர் வெளியேறி, வாகனங்களும், நடந்து செல்வோரும் பாதிக்கின்றனர். இதை அடையாளம் காட்ட, இவ்விடத்தில் தடுப்பு வைத்தும், எச்சரிக்கை கம்பும் நட்டும் வைத்துள்ளனர். மூடியை முறையாக சீரமைத்து, கழிவு வெளியேறுவதை தடுக்க முயற்சிக்கலாமே?
மரம் வளருது; கட்டடம் தேயுது: பல்வேறு குறைகள், பிரச்னைகளுக்கு தீர்வு காண அல்லது தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், ஈரோடு தாலுகா அலுவலகத்துக்கு, நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வருகின்றனர். அவர்களுக்கு தாகம் தீர்க்க, தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், பராமரிப்பு இல்லாததால், தொட்டி வைக்கப்பட்ட கட்டடத்தின் மீது அரசமரம் முளைத்து, விரிசலுக்கு காரணமாகியுள்ளது. மரத்தை வெட்டி அகற்றினால் நல்லது.

ஜந்துக்களின் வீடான காலாவதி வாகனங்கள்: ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட கருவூல அலுவலகத்தின் பின்புறம், காலாவதியான வாகனங்களை நிறுத்தியுள்ளனர். பல ஆண்டுகளாக நிற்பதால், பயத்தை துறந்து, விஷ ஜந்துக்கள் வீடாக்கி கொண்டு விட்டன. ஓய்வு சமயங்களில், அவ்வப்போது தலைகாட்டுவதாகவும், பார்த்து, பயந்தவர்கள் புலம்புவது அதிகரித்துள்ளது. இந்த வீடுகளை... தப்பு தப்பு... வாகனங்களை காயலான் கடைக்கு போடலாம். அல்லது அப்புறப்படுத்தி, பயத்தை போக்கலாம்.

புல்வெளியல்ல... தாசில்தார் ஆபீஸ்: புற்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால், புல்வெளி என நினைத்து விடாதீர்கள். அந்தியூர் தாலுகா அலுவலகம்தான் இது... அலுவலகத்தின் பின்புறம், மக்கள் பயன்படுத்தும் கழிப்பறை உள்ளது. இந்த இடத்தில், பறிமுதல் செய்த வாகனங்களையும் ஓரம் கட்டியுள்ளனர். தொடர் மழையால் புற்கள் புதராக வளர்ந்து, புல்வெளியாக மாறி வருகிறது. இதை கடந்துதான், கழிவறை செல்ல வேண்டும். இதற்கு பயந்தே பலர் பின்வாங்குகின்றனர். இந்நிலைக்கு தீர்வு காணலாமே?

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X