மனைவியை தாக்கிய தொழிலாளி கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியை தாக்கிய தொழிலாளி கைது

Added : டிச 01, 2019

ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம், மரப்பாலம், ஐந்தாவது வீதியை சேர்ந்த பழனிச்சாமி மகள் வினோதினி, 25; ஈரோடு, லக்காபுரம், முத்துக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்த, தறிபட்டறை தொழிலாளி வெற்றிவேல், 27; இருவருக்கும் மூன்று ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதியருக்கு ஒரு மகன் உள்ளார். கருத்து வேறுபாட்டால், கணவரை பிரிந்து, பெற்றோர் வீட்டில் வினோதினி வசிக்கிறார். கருங்கல்பாளைத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு வந்த வெற்றிவேல், குடும்பம் நடத்த மனைவியை அழைத்துள்ளார். அவர் மறுக்கவே, தகாத வார்த்தை பேசி, அடித்து உதைத்து, கொலை செய்து விடுத்துள்ளார். வினோதினி புகாரின்படி, கருங்கல்பாளையம் போலீசார், இரு பிரிவுகளில் வழக்குபதிந்து, வெற்றிவேலை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X