சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்வாரிய அலுவலர் வீட்டில் 5 பவுன், ரூ.1 லட்சம் திருட்டு

Added : டிச 01, 2019
Advertisement

பவானி: பவானியில், மின்வாரிய அலுவலர் வீட்டில், நகை, பணம் திருடிய ஆசாமிகளை, போலீசார் தேடி வருகின்றனர்.
பவானி அருகேயுள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் சையத்காதர், 53; பெருந்துறை மின்வாரிய அலுவலக லைன் இன்ஸ்பெக்டர். நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டார். மகன்களுடன் அருகிலுள்ள அம்மா வீட்டுக்கு மனைவி சென்று விட்டார். நேற்று காலை, வீடு திரும்பினர். கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்றபோது, பீரோவும் திறக்கப்பட்டிருக்க, பொருட்கள் இறைந்து கிடந்தன. பீரோவில் வைத்திருந்த சங்கிலி, வளையல் என ஐந்து பவுன் நகை, ஒரு லட்சம் ரூபாய் காணாமல் போனது தெரிய வந்தது. புகாரின்படி சித்தோடு போலீசார், நேரில் சென்று விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள், ரேகைகளை பதிவு செய்தனர். திருட்டு சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X