சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் மோதி டீக்கடைக்காரர் பலி: பொதுமக்கள் சாலை மறியல்

Added : டிச 01, 2019
Advertisement

திருச்சி: துவரங்குறிச்சி அருகே, டூவீலர் மீது கார் மோதியதில், டீக்கடைகாரர் பலியானார். திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள கல்லாமேட்டை அடுத்த கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் வரதராஜ், 60. இதே பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வந்த இவர், நேற்று, டூவீலரில் மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கல்லாமேடு என்ற இடத்தில் சாலையை கடக்க முயன்றார். அப்போது, மதுரையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற கார், டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த வரதராஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்தில் கூடிய அப்பகுதி பொதுமக்கள், கல்லாமேடு பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால், பேரிகார்டு அமைத்து தரக்கோரி, தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலை ரோந்து போலீசார், பேச்சு நடத்தியும், பொதுமக்கள் கலைந்து செல்ல மறுத்தனர். மருங்காபுரி தாசில்தார், மணப்பாறை டி.எஸ்.பி., குத்தலிங்கம் ஆகியோர், பேரிகார்டு மற்றும் மின் விளக்குகள் உடனடியாக அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்ததையடுத்து மறியலில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். இதனால், திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X