பொது செய்தி

தமிழ்நாடு

தீப திருவிழாவில் விநாயகர் உற்சவம்

Added : டிச 01, 2019
Advertisement

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில், தீப திருவிழாவில் நேற்று, விநாயகர் உற்சவம் நடந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கொண்டாடப்படும் தீப திருவிழா இனிதே நடக்க வேண்டி, நேற்று விநாயகர் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு, அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. தொடர்ந்து, விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் இரவு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஆயிரக்கணக்கானோர் வழிபட்டனர். இன்று, உத்திராடம் நட்சத்திரத்தில், விருச்சிக லக்னத்தில் காலை, 5:30 மணிக்கு மேல், 7:05 மணிக்குள், பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர், சுவாமி தங்க கொடி மரம் முன்பு எழுந்தருள, 50க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கொடியேற்றம் நடக்கும். வரும், 7ல், பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம், 10ல், அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் கருவறை எதிரில் பரணி தீபம், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X