சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லஞ்சப் பணத்தை திரும்ப கேட்ட பெண்: ஆடியோ வைரல்; தி.மலையில் பரபரப்பு

Added : டிச 01, 2019 | கருத்துகள் (1)
Advertisement

ஆரணி: போலீசாரிடம் கொடுத்த, ஒரு லட்சம் ரூபாய் லஞ்சப் பணத்தை திரும்ப தருமாறு பெண் கேட்ட ஆடியோ வைரலாகி வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த ஆகாரம் கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ்,35. இவர், மணல் கடத்தல் தொழில் செய்து வந்தார். தற்போது மணல் கடத்துவதை நிறுத்திவிட்டார். ஜல்லிக் கற்கள் ஏற்றிச் செல்லும் தொழில் செய்கிறார். இதனால், போலீசாருக்கு மாமூல் வருவது தடைப்பட்டது. கடந்த மாதம், தேவராஜின் காலி டிராக்டரை, எஸ்.ஐ., ஜமீஸ்பாபு, எஸ்.பி., ஏட்டு முருகன் ஆகியோர் பிடித்துச் சென்று, மணல் கடத்தியதாக வழக்கு பதிந்து அவரை சிறையில் அடைத்தனர். தற்போது, அவர் ஜாமினில் வெளி வந்துள்ளார். இந்நிலையில், ஜமீஸ்பாபு மற்றும் தேவராஜ் பேசிய ஆடியோ வைரலாகி வருகிறது. அதில், 'இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்திதான் வண்டியை பிடித்து வர சொன்னார். வேறு வழியில்லாமல் செய்தேன்' என, 15 நிமிடங்களுக்கு மேலாக பல்வேறு விஷயங்களை பேசிக்கொண்டிருக்கும்போது, தேவராஜ் மனைவி நித்யதேவி குறுக்கிட்டு, 'சார், நீங்க கேஸ் போடமாட்டீங்கன்னுதான், ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தேன். கேஸ் போட்டுட்டீங்க, எங்க வீட்டுக்காரரும் ஜெயிலுக்கு போயிட்டு வந்துட்டாரு. அதனால வாங்கின பணத்தை திருப்பி கொடுங்க. நாங்க ஐகோர்ட்ல வழக்கு போட போறோம். எங்க மாமாவும் போலீஸ்தான். அவருகிட்ட சொல்லிட்டோம். பணத்தை கொடுத்துட்டா விட்ருங்கன்னு சொன்னாரு. அதனால் அமைதியா இருக்கிறோம். எங்கு வீட்டுக்காரரு மன உளைச்சலில் உள்ளார். எங்க குடும்பத்துக்கு ஏதாவது ஆச்சுன்னா, நான் சும்மா இருக்கமாட்டேன்' என, கூறினார். இந்த ஆடியோ வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-டிச-201909:17:56 IST Report Abuse
ஆப்பு இந்தப் போலீஸ் கிரிமினல்களை டிஸ்மிஸ் செஞ்சு 10 வருஷம் உள்ளே தள்ளணும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X