பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - சேலம்

Added : டிச 01, 2019
Advertisement

வேகத்தடை அமைக்க வேண்டும்: மேட்டூர்-பவானி நெடுஞ்சாலையில், காவேரிகிராஸ் பஸ் நிறுத்தத்தை கடந்து தினமும் பள்ளிக்கு, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் வாகனங்களில் செல்கின்றனர். பொதுமக்களும் சாலையை கடந்து கோல்நாயக்கன்பட்டி கிராமத்திற்கு செல்கின்றனர். இந்த பகுதியில், வாகனங்கள் அதிவேகமாக செல்வதால், நடந்து செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர். அடிக்கடி உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே, அப்பகுதியில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கு. அன்பழகன், காவேரிகிராஸ்.

அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதி: சங்ககிரி, தேவூர் புதுப்பாளையம், இந்திரா நகரில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்கு, சாக்கடை வசதியில்லாததால், சாலை நடுவே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும், தனிநபர் கழிப்பிடம், பொது கழிப்பிட வசதிகள் இல்லை. இதனால், சாலையோரம் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, பெண்கள் அவதிப்படுகின்றனர். சாலை மற்றும் கழிப்பிட வசதி செய்து கொடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எஸ்.பாவாயி, தேவூர் புதுப்பாளையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X