பொது செய்தி

தமிழ்நாடு

120 சத்துணவு கூடங்கள் பழுதுநீக்க தலா ரூ.10 ஆயிரம் ஒதுக்கீடு

Added : டிச 01, 2019
Advertisement

சேலம்: பழுதான, 120 சத்துணவு கூடங்களை பழுதுநீக்க, தலா, 10 ஆயிரம் ரூபாய் வீதம், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில், 1,820 சத்துணவு கூடங்கள் உள்ளன. அதில், 205 அடியோடு சேதமாகி விட்டதால், வகுப்பறை மற்றும் தனியாக ?ஷட் அமைத்து, இட நெருக்கடியில், தற்காலிக கட்டடங்களில் இயங்கி வருகின்றன. தவிர, 109 கூடங்கள், பழுதாகி, மழை, வெயில், ஆக்கிரமித்து கொள்ளும் நிலை உள்ளது. எனவே, பழுதான சத்துணவு கூடங்களை, மராமத்து செய்ய, நிதி ஒதுக்கீடு செய்யும்படி, மாவட்ட நிர்வாகம், அரசுக்கு பரிந்துரைத்தது. அதையேற்று, 109க்கு பதிலாக, 120 சத்துணவு கூடங்களை மராமத்து செய்ய, தலா, 10 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்நிதியில், சேதமான சத்துணவு கூடங்கள், விரைவில், பழுது நீக்கப்பட உள்ளன. அதிகபட்சம், காடையாம் பட்டியில், 16, பெ.நா.பாளையம், 12, வீரபாண்டி, தாரமங்கலம், தலா, 10, வாழப்பாடி, 8, கொங்கணாபுரம், 7 என, மொத்தம், 120 சத்துணவு கூடங்கள், 12 லட்ச ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X