ஒன்றிய அளவிலான பேச்சு, கட்டுரை போட்டி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒன்றிய அளவிலான பேச்சு, கட்டுரை போட்டி

Added : டிச 01, 2019

வீரபாண்டி: நேரு யுவகேந்திரா சார்பில் ஒன்றிய அளவில் நடந்த பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளில், ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
சேலம் மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் வீரபாண்டி ஒன்றிய கிளை சார்பில், மத்திய அரசின், 'ஜல்சக்தி அபியான்' நீர் மேலாண்மை, தேச ஒற்றுமை, டெங்கு விழிப்புணர்வு ஆகிய தலைப்புகளில், ஒன்றிய அளவில், 15 வயது முதல், 29 வயது வரை, உள்ளவர்களுக்கு பேச்சு மற்றும் கட்டுரை போட்டி, வீரபாண்டி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. இதில் வீரபாண்டி, ஆட்டையாம்பட்டி சுற்றுவட்டாரங்களில் இருந்து, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டிகளை வீரபாண்டி பி.டி.ஓ., செல்வகுமார் துவக்கி வைத்தார். பேச்சு போட்டியில், சென்னகிரி, 'ஆதன்' இளைஞர் நற்பணி சங்கத்தை சேர்ந்த தர்மலிங்கம் முதலிடம், எஸ்.பாப்பாரப்பட்டி தீரன் இளைஞர் நற்பணி சங்கத்தை சேர்ந்த மாரிமுத்து இரண்டாமிடம், சென்னகிரி ஆதன் சங்கத்தை சேர்ந்த பவித்ரா மூன்றாமிடம் பிடித்தனர். இதே போல் கட்டுரை போட்டியில் எஸ்.பாப்பாரப்பட்டி தீரன் சங்கத்தை சேர்ந்த ரேவதி முதலிடம், சென்னகிரி ஆதன் சங்கத்தை சேர்ந்த ஜோதி மற்றும் கோபி ஆகியோர் இரண்டு மூன்றாம் இடங்களை பிடித்தனர். ஒட்டுமொத்தமாக, சென்னகிரி 'ஆதன்' இளைஞர்கள் நற்பணி சங்கம் அதிக புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக்கோப்பை மற்றும் சான்றிதழ்களை நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ட்ரவின் சார்லஸ்டன் வழங்கி பாராட்டினார். ஏற்பாடுகளை வீரபாண்டி வட்டார ஒருங்கிணைப்பாளர் குமரேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X