பொது செய்தி

தமிழ்நாடு

டேனிஷ்பேட்டையில் முதலை சிக்கியதால் வனத்துறையினர் அதிர்ச்சி

Added : டிச 01, 2019
Advertisement

ஓமலூர்: டேனிஷ்பேட்டை வனப்பகுதியில், 'நன்னீர் முதலை' சிக்கியதால், வனத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகாவில் டேனிஷ்பேட்டை வனச்சரகத்தில் மான், காட்டெருமை, காட்டுப்பன்றி, செந்நாய்கள், நரிகள் ஆகியவை உள்ளன. நேற்று பகலில், கருவாட்டுப்பாறை பீட் என்ற பகுதியில், ஆலமரத்துக்காடு என்ற இடத்தில், சரபங்கா ஆறு அருகே, ஒரு மீட்டர் நீளமுடைய, 4 கிலோ எடை கொண்ட முதலையை நாய்கள் துரத்தியுள்ளன. இது குறித்து, அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வருவதற்குள் நாய் துரத்தியதை தொடர்ந்து, முதலை இறந்து கிடந்தது. முதலை நடமாட்டம் இல்லாத டேனிஷ்பேட்டை வனப்பகுதிக்குள், முதலை வந்ததால் வனத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்று காலை வனத்துறை அலுவலகத்தில் பிரேத பரிசோதனை நடைபெறவுள்ளது. இது குறித்து டேனிஷ்பேட்டை ரேஞ்சர் பரசுராமமூர்த்தி கூறியதாவது: இது நன்னீர் முதலை வகையை சேர்ந்தது. ஏரி, குளம், குட்டை ஆகிய பகுதியில் வளரக்கூடியது. சரபங்கா ஆற்றில், மழை வெள்ளத்தில் அடித்து வந்திருக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X