மேட்டூர்: சேலம் மாவட்டத்தில் ஒரே இடத்தில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்கள், சொந்த வட்டாரத்தில் பணிபுரிபவர்கள் என, மொத்தம், 55 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில், 20 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில், பல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தங்களது சொந்த ஒன்றியங்களில் பணிபுரிந்தனர். மேலும், பலர் ஒரே அலுவலகத்தில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தனர். இவ்வாறு ஒரே அலுவலகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் மற்றும் தங்கள் சொந்த ஒன்றியத்தில் பணிபுரிந்த மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேறு ஒன்றியங்களுக்கு மாற்ற, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் அறிவுறுத்தினார். அதை தொடர்ந்து சேலம் கலெக்டர் ராமன் உத்தரவுபடி கடந்த, 28 ல், 20 ஒன்றியங்களில் பணிபுரிந்த, 55 மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.