சேலம்: மாற்றுத்திறனாளிகள், விபத்தின்றி சாலையை கடக்க, தனிபாதை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சேலம், கலெக்டர் அலுவலகம் எதிரே, பார்வையற்ற மற்றும் மாற்றுத் திறனாளிகள், சாலையை கடக்க ஏதுவாக, ரேடியோ அறிவிப்புடன், சமிக்ஞையுடன் கூடிய, தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையை கடக்க, 17 வினாடிகள் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவரை, இதர வாகனங்கள் அனைத்தும் நின்று செல்லும் இதேபோல, சேலத்தில், போக்குவரத்து சிக்னல்கள் அமைந்துள்ள, 33 இடங்களில், இத்தகைய தனி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விபத்தின்றி, சாலையை எளிதில் கடக்கவே, இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநகர கமிஷனர் செந்தில்குமார், துணை கமிஷனர் செந்தில் ஆகியோர், தனிப்பாதையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சென்னையை அடுத்து, சேலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு, தனிபாதை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.