சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனையில் 'குண்டாஸ்' கைதி ரகளை

Added : டிச 01, 2019
Advertisement

சேலம்: சேலம், அரசு மருத்துவமனைக்கு, சிகிச்சைக்கு வந்த, 'குண்டாஸ்' கைதி, திடீரென, பிளேடால், கிழித்து கொண்டு, ரகளை செய்தவர், டாக்டரையும் தாக்க முயன்றார். சென்னை, வியாசர்பாடியை சேர்ந்த முருகன் மகன் சாம்பார் பிரகாஷ்,26. இவர், வழிப்பறி மற்றும் கொலை முயற்சி வழக்கில், நாமக்கல் மாவட்டம், நாமகிரிபேட்டை போலீசாரால், கைது செய்யப்பட்டார். இச்சம்பவம், கடந்த ஜூலை, 29ல், நடந்தது. பின், ஆக.,1ல், சேலம் மத்தியசிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து, குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்க, பிரகாஷ், செப்.,ல், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திடீரென, நேற்று, வயிற்றுவலி என கூறியதால், அவரை, போலீசார், பாதுகாப்புடன், பகல், 12:00 மணிக்கு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு, சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்து, பிளேடால், கழுத்து, கை பகுதியில் அறுத்து கொண்டு, ரகளை செய்தார். ரத்தம் கொட்டிய அவருக்கு, சிகிச்சையளித்த மருத்துவரையும், பிளேடை காட்டி தாக்க முற்பட்டார். பின், போலீசார் ஒத்துழைப்புடன், அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. இது தொடர்பாக, மருத்துவமனை போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே, இருமுறை, சிறையில் தற்கொலைக்கு முயன்று ரகளை செய்தவர், நேற்று, மருத்துவமனையில், பிரச்னை செய்தார். அவர் மீது, தற்கொலை முயற்சி வழக்குபதிந்து, மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போலீசார் வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X