சம்பவம் செய்தி

தமிழ்நாடு

4 பவுன் தாலிக்கொடி மீட்பு: பல்சர் கொள்ளையன் கைது

Added : டிச 01, 2019
Share
Advertisement
சேலம்: சேலத்தில், மூதாட்டியிடம், நான்கு பவுன் தாலிக்கொடியை அபேஸ் செய்த, பலே வாலிபர் சிக்கினார். அவரது, கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர். சேலம், கன்னங்குறிச்சி, கோவிந்தசாமி காலனியை சேர்ந்த சின்னதுரை மனைவி அமுதா,50. இவர், கடந்த 25, மதியம், 2:00 மணியளவில், அண்ணாநகர் பூங்கா, பின்புறம் வழியாக, வீட்டுக்கு தனியாக நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது, கறுப்புநிற பல்சர் பைக்கில்

சேலம்: சேலத்தில், மூதாட்டியிடம், நான்கு பவுன் தாலிக்கொடியை அபேஸ் செய்த, பலே வாலிபர் சிக்கினார். அவரது, கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர். சேலம், கன்னங்குறிச்சி, கோவிந்தசாமி காலனியை சேர்ந்த சின்னதுரை மனைவி அமுதா,50. இவர், கடந்த 25, மதியம், 2:00 மணியளவில், அண்ணாநகர் பூங்கா, பின்புறம் வழியாக, வீட்டுக்கு தனியாக நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது, கறுப்புநிற பல்சர் பைக்கில் வந்த இருவர், மூதாட்டி கழுத்தில் இருந்த நான்கு பவுன் தாலிக்கொடியை பறித்து கொண்டு தப்பினர். கன்னங்குறிச்சி போலீசார் வழக்குபதிந்து, தீவிர விசாரணைக்கு பின், நேற்று, கொண்டப்பநாயக்கன்பட்டி, ரங்கநாதன் மகன் சிவசுப்பிரமணியம்,26, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, தாலிக்கொடி, வழிப்பறிக்கு பயன்படுத்திய பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவரது கூட்டாளியான, சூரமங்கலம், ஓட்டல் தொழிலாளி, அரியலூரை சேர்ந்த விக்கி,25, என்பவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X