சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மர்ம காய்ச்சலுக்கு பிளஸ் 2 மாணவி பலி

Added : டிச 01, 2019
Advertisement

கெங்கவல்லி: சேலம் மாவட்டம், கெங்கவல்லி, எட்டாவது வார்டு பகுதியை சேர்ந்த, கூலித்தொழிலாளி குருநாதன் மகள் சுவேதா, 16. இவர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த, 25ல், காய்ச்சல் ஏற்பட்டதால், நடுவலூரில் உள்ள தனியார் மெடிக்கலுக்கு மாணவியை அழைத்துச் சென்று, இரண்டு ஊசி போட்டுள்ளனர். இதில், மாணவியின் இடுப்பில் வீக்கம் ஏற்பட்டு சீல் பிடித்துள்ளது. அதன்பின், காய்ச்சல் தீவிரமடைந்ததால், 28ல், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். நேற்று, மாணவி உயிரிழந்தார். தனியார் மெடிக்கலில் ஊசி போட்டதில், மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X