தலைவாசல்: தலைவாசல் அருகே, சாலையின் குறுக்கே வாகனங்கள் செல்வதால், விபத்துகள் ஏற்படுகின்றன. தலைவாசல், சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. காட்டுக்கோட்டை மேம்பாலம், கூட்டுரோடு உள்ளிட்ட பகுதிகளில், சென்டர் மீடியன் தொடர்ச்சியாக இல்லாமல், இடைவெளியுடன் காணப்படுகிறது. சாலையின் மறுபுறம் செல்வோர், சர்வீஸ் சாலையை தவிர்க்கும் பொருட்டு, இடைவெளியில் புகுந்து செல்கின்றனர். இதனால், எதிர்புற சாலையில் வரும் வாகனங்கள் மோதி, அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. குறிப்பிட்ட இடங்களில், நிரந்தர சென்டர் மீடியன் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.