சங்ககிரி: சங்ககிரியில், வாகன போக்குவரத்தை சீரமைக்க, சிக்னல் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். சங்ககிரியில் இருந்து திருச்செங்கோட்டிற்கு, தினமும் பஸ், கார், பள்ளி, கல்லூரிக்கு ஏராளமான வாகனங்கள், சங்ககிரி ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாப் வழியாக சென்று வருகின்றன. அங்கு, காலை, மாலை நேரங்களில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஸ்தம்பித்து நீண்ட நேரம் நிற்கின்றன. இதனால், குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல், மக்கள் அவதிப்படுகின்றனர். போக்குவரத்து போலீசார் இருந்தும் இச்சம்பவம் தொடர்வதால், அங்கு, சிக்னல் அமைத்து போக்குவரத்தை சீரமைக்க வேண்டும்.