குடியிருப்புகள் நடுவே தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

Added : டிச 01, 2019
Advertisement

வீரபாண்டி: குடியிருப்புகளின் மத்தியில் ஆண்டுகணக்கில் வெளியேற வழியின்றி, தேங்கியுள்ள கழிவுநீரால் சுகாதார சீர்கேட்டுடன், கொசு உற்பத்தி மையமாக மாறி, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆட்டையாம்பட்டி பேரூராட்சி அலுவலகம் பின்புறம், இரண்டாவது வார்டு சித்தையன் வீதியில் குடியிருப்புகளுக்கு நடுவே காலி இடம் உள்ளது. அதில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளம் போல் தேங்கி, துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இங்குள்ள கழிவுநீருடன் மழைநீரும் சேர்ந்து, கொசு உற்பத்தி மையமாகி தொற்று நோய் பரப்பி வருகிறது. இப்பகுதியில் பலருக்கு காய்ச்சல் கை, கால்களில் அரிப்பு நோய் பரவியுள்ளது. கழிவுநீர் தேங்கியுள்ள பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டியுள்ளதால், ஏராளமான விஷ ஜந்துக்களின் புகலிடமாகவும் மாறியுள்ளது. சிறிது மழை பெய்தாலும், பாசி படர்ந்துள்ள கழிவு நீருடன் மழைநீரும் கலந்து அருகில் உள்ள குடியிருப்பு களுக்குள் புகுந்து விடுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பேரூராட்சி அலுவலகம் பின்புறம் குடியிருப்புகள் மத்தியில் தொற்று நோய் பரப்பும் வகையில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X