பொது செய்தி

தமிழ்நாடு

சின்னாற்றின் குறுக்கே அணைகட்ட வலியுறுத்தல்

Added : டிச 01, 2019
Advertisement

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள சின்னாற்றின் குறுக்கே, அணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை, காட்டாற்று வெள்ளமாக உப்பம்பள்ளம் ஆறு பாய்கிறது. இந்த ஆற்றில், ஆண்டுதோறும் அதிக அளவு மழைநீர் பெருக்கெடுத்து ஓடும். இதிலிருந்து ஆண்டுக்கு, 14.75 டி.எம்.சி., மழைநீர் ஆற்றில் செல்கிறது என்பது அரசாணையில் உள்ளது. இந்நிலையில், தற்போது முடிவடைந்த தென்மேற்கு பருவமழை ஜூன், 2019 முதல் செப்டம்பர், 2019 வரை பெய்த மழையால் மட்டும், 20 டி.எம்.சி., அளவுக்கு மழை நீர் பெருக்கெடுத்து உப்பம் பள்ளம் ஆற்றின் வழியாக, பென்னாகரம் பகுதியில் உள்ள சின்னாற்றில் கலந்து, ஒகேனக்கல் காவிரியில் கலந்து வீணாய் போனது. இந்த நீரை தேக்கி வைக்க, ஆற்றில் அணை, ஏரி, குளம், தடுப்பணை உள்ளிட்ட ஏதும் இல்லை. கடந்த, 35 ஆண்டுகளுக்கு முன், உப்பம்பள்ளம் ஆற்றின் குறுக்கே அணைகட்ட, நிலம் கையகப்படுத்தி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அணை கட்ட இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இங்குள்ள சாஸ்திரமுட்லு மலை பகுதியில் அணை கட்டப்பட்டால், 5,000 ஏக்கருக்கும் மேல் விவசாய நிலங்கள் பாசன வசதிபெறும். மேலும், பாலக்கோட்டில் உள்ள, 16 ஏரிகளுக்கும், தும்பலஹள்ளி அணையிலும் நீர் தேக்கி வைக்க முடியும். எனவே, இப்பகுதி விசாயிகளின் நலன்கருதி, இங்கு அணைகட்டும் பணியை துவங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X