குடிநீர் தொட்டி இயக்குபவர்கள் துப்புரவு பணியாளர் சங்கக்கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் தொட்டி இயக்குபவர்கள் துப்புரவு பணியாளர் சங்கக்கூட்டம்

Added : டிச 01, 2019

நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி அருகே, நாகர்கூடலில், குடிநீர் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மைக்காவலர்கள் சங்கத்தின் ஒன்றியக் கூட்டம் நடந்தது. ஒன்றிய நிர்வாகி மாது தலைமை வகித்தார். மாநில செயலாளர் கிருஷ்ணன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். கூட்டத்தில், குடிநீர் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மைக் காவலர்களுக்கு, அரசு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X